பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தொலைக்காட்சிப் படங்கள் சினிமாப் படத்தில் காட்சி முழுவதையும் ஒரே படத்தில் பிடித்து அந்தப் படத்தை முழு தாகவே நம்முடைய கண்ணின் முன்னேயுள்ள திரையில் தோன்றச் செய்கின்றனர். தொலைக் காட்சிப் படத்தை ஒளிபரப்புமூலமாகப் பரப்பித் தோன்றச் செய்யும்போதும் இம்முறையை மேற் கொள்ளப் பார்த்தனர். இங்குப் படம் முழு வதையும் ஒரே சமயத்தில் அனுப்பித் தோன்றச் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக, இவர்கள் செய்த முயற்சியில் வெற்றி காணவில்லை. ஆதலால் அவர்கள் வேறு முறையைக் கையாளத் தொடங்கி னர் ; இதில் வெற்றியையும் கண்டனர். இப் பொழுது படத்தைத் துண்டங் துண்டமாகக் கத்தரித்ததுபோல் அனுப்புகின்றனர். ஏற்கும் இடத்தில் இத்துண்டங்களைத் தக்கவாறு பொருத்தி முழுப் படத்தைப் பெறுகின்றனர். இச் செயலைச் சற்று விரிவாக விளக்குவோம். ‘. . . ஒளிப் படம் (Photo) ஒன்றை ஒரு செய்தித் தாளில் அச்சிடவேண்டுமானல் அதனே ஒரு சமதள மான உலோகத்தகட்டின் மீது அமையச் செய்து, அதனை மையில்ை கனேயச் செய்து, சாதாரண எழுத்துக்களே அச்சிடுவதுபோல் அச்சிடுகின் ருேம். ஆனால், உலோகத் தகடு முழுவதும்