பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகன அலைகள் 63 ளேம் கிடைக்கும். வானெலியைப்பற்றிப்படிக்கும் போதும் இதனை விளக்கியுள்ளோம். வ்ானெலி அலைகளின் அலைநீளங்கள் மிக நீளமானவை; சில சமயம் அவற்றின் நீளம் 100 கெஜம்கூட இருக் கும். தொலைக்காட்சி அலைகளின் அலே நீளம் மிகச் சிறியது; அஃது ஒரங்குலத்தின் மிகச் சிறிய பின்னமாகும். படம் 30: பட அலைகள் ஏறிச்செல்லும்போது வாகன அலைகளின்நிலையை விளக்குவது (இது மாறலை) தொலைக்காட்சி அலைகளின் அதிர்வு-எண் அதிகமாக இருப்பதாலும், அவற்றின் அலை நீள மும் மிகக் குறுகியதாக இருப்பதாலும் அவை சாதாரண வானெலி அலைகளினின்றும் வேறு விதமான போக்கினைக் கொண்டுள்ளன. அவை கட்டிடங்கள், குன்றுகள், அல்லது மிக உயர்ந்த பிற தடைகள் முதலியவற்ருல் எளிதாகப் பிரதி பலிக்கப்பெறுகின்றன (Reflected). மேலும், இந்த அலைகள் சாதாரண வானெலி அலைகள்போல் அயனி மண்டலத்தால் பிரதிபலிக்கப்பெருமல் அதனைத் துளைத்துச் சென்று வானவெளியில்