பக்கம்:இளைஞர் வானொலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானொலி அலைகள்

51


நம்முடைய வானொலிப் பெட்டிகளின் முகப்பில் காணப்பெறும் எண்கள் அதிர்வு - எண்களாகும். இந்த எண்களைக் கொண்டு நாம் பல்


படம் 30. வானொலிப் பெட்டியின் முகப்பில் அலை நீளங்களைக்
காட்டும் அமைப்பு.

வேறு ஒலி பரப்பு நிலையங்களை அறிந்துகொள்ளலாம். 319. 4 என்ற எண்ணில் (இஃது அலைநீளம்) முள் வருமாறு கைப்பிடிக் குமிழைத் திருப்பினால் திருச்சி நிலைய நிகழ்ச்சிகள் கேட்கின்றன. அது 211 என்ற எண்ணில் (இஃது அலைநீளம்) வருமாறு திருப்பினால் சென்னை நிலைய நிகழ்ச்சிகள் செவிக்கு அமுது அளிக்கின்றன.இங்குக் குறிப்பிடப்பெற்ற இரண்டு எண்களும் நடுத்தர அலைகளின் நீளங்களைக் குறிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/59&oldid=1396161" இலிருந்து மீள்விக்கப்பட்டது