இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18. வானொலி
இந்தச் சிறு புத்தகத்தில் நாம் பல செய்திகளைத் தெரிந்து கொண்டோம். நாம் இப்பொழுது சிறிதளவு குழம்பிய நிலையில் இருக்கலாம். இது காறும் அறிந்தவற்றைக் கொண்டு வானொலி செயற்படுவதைச் சுருக்கமாகக் கூறுவோம்.
படம் 35. வானொலி செயற்படுவதை விளக்குவது.
முதல்நிலை: வானொலி நிலையத்திலுள்ள (studio) அறையொன்றில் இசைக் கலைஞர் ஒருவர் ஒலிவாங்கியின் முன்னிருந்து பாடுகின்றார், ஒலிவாங்கியிலுள்ள மெல்லிய உலோகத் தகடு அதிர்கின்றது; அவ்வாறு அதிர்வதால் தனக்கு பின்னாலுள்ள கரித்துணுக்குகளின் அமுக்கத்தில் மாறுதல்களை உண்டாக்கிக் கம்பிகளிலுள்ள மின்னோட்டத்தை மாறுபடச் செய்கின்றது.
இரண்டாம்நிலை : அதிரும் மின்னோட்டம் பல மைல்கள் தொலைவிலுள்ள ஒலிபரப்பும் நிலை