இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
இளைஞர் வானொலி
நான்காம்நிலை: உயரமான கம்பியிலிருந்து ஒலி
யலேயினைச் சுமந்துகொண்டு செல்லும் வாகன அலை வானவெளியில் நாலா பக்கங்களிலும் பரவிச் செல்லுகின்றது. வேறு நிலையங்களினின்று வரும் வாகன அலைகளும் இதனோடு கலக்கின்றன. இந்த அலைகள் யாவும் நம்முடைய வானொலிப் பெட்டியின் வான் கம்பியைத் (aerial) தாக்குகின்றன. அவை அவ்வாறு வரும் நிலையில் மிகவும் வன்மையற்று, பயனற்று, இருக்கின்றன.
ஐந்தாம்நிலை : நாம் பெட்டியிலுள்ள சிறுகைப்பிடிப்
குமிழ்களைத் திருப்பி நமக்கு வேண்டிய அலையெண்றினை தேர்தெடுத்து சுருதி செய்து கொள்ளுகின்றோம்.
ஆறாம்நிலை :நாம் தேர்ந்தெடுக்கும்
ஒலியலையினைக்கொண்ட உயர்ந்த அதிர்வுடைய வாகன அலை நம்முடைய பெட்டியினுள் வருங்கால் மிகவும் வன்மையற்றிருக்கும்.இந்நிலையில் இதனை ஒலி பெருக்கியினுள் அனுப்ப இயலாது. இது வெற்றிடக் குழல்களினுள் செலுத்தப்பெற்று மிகவும் வன்மையாக்கப் பெறுகின்றது. இது குழல்களினுள் போகும் பொழுது இருதிசை மின்னோட்டத்தின் மிக நுண்ணிய துடிப்புக்கள் யாவும் வன்மையடைகின்றன. இதன்பிறகு இந்த மின்