பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்

109

அதன்பின் நானூறு ஆண்டுகள் கழித்து 1700 இல் ஊசலோடு கூடிய (Pendulam) நிமிட முள் கொண்ட புதுமுறை கடிகாரமாக அது மாற்றியமைக்கப்பட்டது. இதன்பிறகு இன்று வரை எண்ணற்ற வடிவங்களில் சுவர்க்கடிகாரங்களும் கைக்கடிகாரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கையில் கட்டும் கடிகாரங்கள் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளன.

கடிகாரத் தொழில் இன்று மிக நவீனமானதாக, வளமாக வளர்ந்துள்ளது. நிமிட விநாடிகளைக் காட்டுவதோடு தேதியையும் கிழமைகளின் பெயர்களையும் காட்டுவனவாக அமைந்துள்ளன.

கிழமை, தேதி காட்டும் கைக்கடிகாரம்

பேட்டரியால் இயங்குவதோடு இரவில் பளிச்சென்று நேரங்காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுவர்க் கடிகாரங்களில் அலாரம் அடிப்பது போன்று கைக்கடி காரங்களிலும் அலாரம் அடிக்கும் வசதிகள் செய்யபட்டுள்ளன.

ஓட்டப்பந்தயத்தில் துல்லியமாக விநாடிகளைக் கணக்கிட்டறிய நிறுத்து கடிகாரங்கள் (Stop watch) புழக்கத்தில் உள்ளன. கண்ணுக்குக் கவர்ச்சியூட்டும் வகையில் புதிய புதிய வண்ணங்களில், வடிவங்களில் கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கண் : “எண் சாண் உடம்புக்குத் தலையே முதன்மையானது“ என்பதுபழமொழி.தலையில் உள்ள உறுப்புகளுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கண் ஆகும். முகத்தில் உள்ள இரு கண்களும் ஏழு எலும்புகளாலான குழிக்குள் மிகப் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழாக உள்ள மூக்கும் கன்ன எலும்புகளும் பாதுகாப்பளிக்கின்றன.

ஒவ்வொரு கண்ணையும் குழிச்சுவரோடு இணைந்த ஆறு தசைகள் இயக்க உதவுகின்றன. இவற்றின் உதவியால் கண்ணை எப்பக்கமும் திருப்ப இயலும். கண்ணினுள் அமைந்துள்ள சிறு உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒருவிதப் பணியைச் செய்கின்றன.

நாம் பொருள்களைப் பார்க்க கண்ணின்முன்புறமுள்ள பாவை (Pupil)யும் அதன் பின்புறமுள்ள லென்சும் உதவுகின்றன. இவை இரண்டின் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்கள் பார்வைப் படலத்தில் (Ratina) குவிகின்றன. இவ்வாறு பார்வைப் படலத்தில் விழும் பிம்பம் அங்கு அமைந்துள்ள நரம்பணுக்களில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இம்மாற்றத்தை பார்வை நரம்புகள் உடனடியாக மூளைக்குத் தெரிவிக்கின்றன.

“ஐரிஸ்’ என்று சொல்லப்படும் விழித்திரை பாவையைச் சுற்றி அமைந்துள்ளது. அதிக வெளிச்சத்தின்போது விழித்திரை விரிய பாவை சிறிதாகிவிடும். இதனால் அதிக ஒளி கண்ணுக்குள் புகாமல் தடுக்கப்படுகிறது. வெளிச்சம் குறைவாக இருக்கும்போது விழித்திரை சுருங்க பாவை பெரிதாகிவிடும்.

நாம் பார்க்கும் பொருளின் தூரத்துக்கேற்ப கண்ணில் உள்ள லென்ஸ் குவிந்தும் தட்டையாக மாறியும் பார்க்கும் பொருளின் பிம்பத்தை பார்வைப் படலத்தில் விழவைக்கிறது. கரு விழிப்படலம் ஒளி ஊடுருவிச் செல்ல உதவுகிறது.

கண் அமைப்பு வரைபடம்

கண்ணைக் காக்கும் கேடயமாக அமைந்திருப்பது இமைகள் ஆகும். கண்களினுள் தூசி விழாமல் தடுப்பதோடு தவறிவிழும் தூசிகளைத் துடைத்தெடுக்கும் துடைப்பானாகவும் பயன்படுகிறது. இமைகள் கண்ணீர்ச் சுரப்பிகளை அழுத்துவதால் வெளிப்படும் கண்ணீர்