பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோப்பர்னிக்கஸ்

147

சில குறிப்பிட்ட உடற்பகுதிகளிலுள்ள இணைப்புத் திசு (Connective tissue) உயிரணுக்களில் கொழுப்பு சேருகிறது. முதலில் உயிரணுக்களில் உள்ள மிகச் சிறிய திவலை முகில் (droplets) பகுதியில் சென்று சேருகிறது. பின்னர் அது அளவில் பெரிதாகி பெருந் திவலை போலாகிறது. இறுதியில் உயிரணு பலூன்போல் ஊதிவிடுகிறது. முடிவாக மெல்லிய மேலுறையோடு கூடிய திசு பெரும் கொழுப்புத் துளிபோல் ஆகிவிடுகின்றது. இத்தகைய நிலை உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே ஏற்படுகிறது. காதுகள், மூக்கு, நெற்றி, உடலிலுள்ள மூட்டுகள் ஆகியவிடங்களில் சாதாரணமாகக் கொழுப்பு உயிரணுக்கள் இருப்பதில்லை. வழக்கமாக ஆண்களின் உடலைவிட பெண்களின் உடல் அதிக அளவில் கொழுப்பை சேகரித்து வைத்துக்கொள்கின்றது. உதாரணமாக, சாதாரண ஆணின் உடல் 10 சதவிகித கொழுப்பைக் கொண்டிருந்தால். சாதாரண பெண்ணின் உடல் 25 சதவிகிதக் கொழுப்பைக் கொண்டிருக்கும். இதன்படி பார்த்தால், இளைஞன் ஒருவனின் உடல் 5 கிலோ கொழுப்பைக் கொண்டிருந்தால், ஒரு இளநங்கையின் உடல் 15 கிலோ கொழுப்புடையதாக இருக்கும்.

உடலில் கொழுப்பு அதிகரிப்பது உண்ணும் உணவு உடலில் அதிகம் தங்குவதைப் பொறுத்தமைகிறது. நமக்குத் தெரிந்தவரை நம் உடலிலுள்ள மிகச் சிறந்த எரிபொருளாக அமைந்திருப்பது கொழுப்பாகும். சாதாரணமாக நாள்தோறும் நம் உடலின் எரிபொருளாகப் பயன்படுவது ஸ்டார்ச்சாகிய மாவுச் சத்திலிருந்து பெறப்படும் சர்க்கரைச் சத்தாகும். சர்க்கரை வெகு எளிதாகவும் வேகமாகவும் எரிந்து போகும். ஆனால், கொழுப்பு எரிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சர்க்கரை எரிவதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தைவிட கொழுப்பு எரிவதன்மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாகும். உண்மையில் சர்க்கரையைவிட இரு மடங்கு சக்தி கொழுப்பு மூலம் கிடைக்கிறது. இதனால், கொழுப்பு உடலின் தேவைக்குச் சற்று அதிகமாக நாம் உணவு உட்கொண்டால் தேவைக்கு அதிகமான உணவுச் சத்து கொழுப்பாக உடலில் தங்கிவிடுகிறது.

அடைபஞ்சாக உடலுக்குக் கொழுப்பு தேவைப்படுகிறது. நீர் மெத்தைபோல் உடலில் செயல்படுகிறது. இடுப்புக்குக் கீழேயுள்ள பிட்டப் பகுதியில் கொழுப்பு நீர் மெத்தை போல் அமைந்திருப்பதால் எளிதாக மெத்தென்று நம்மால் வசதியாக உட்கார முடிகிறது. அதே போன்று கால் வளைவுப் பகுதிகள் உள்ளங்கையின் தோல் அடிப்பகுதி, முகத்தின் இருபுறக் கண்ணங்கள் ஆகியவை இத்தகைய கொழுப்பைக் கொண்ட நீர் மெத்தையினால் சிறப்பாக அமைந்துள்ளன. இத்தகைய நீர் மெத்தையின்மீது தான் நம் கண் விழிகள் அமர்ந்துள்ளன.

மூன்றாவதாக, உடலின் வெப்பம் எக்காரணம் கொண்டும் குறைந்து விடாமல் கொழுப்புப் பார்த்துக்கொள்கிறது.

உடம்பில் கொழுப்பு அளவுக்கு அதிகமாக இருந்தாலும் ஆபத்துதான். மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் வருவதை அது ஊக்கப்படுத்தும். எனவே, உடம்பில் கொழுப்பு அளவோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.


கோப்பர்னிக்கஸ் : பண்டைக் காலத்தில் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. அதனால் தான் இரவு பகல் ஏற்படுகின்றன என்று தவறாகக் கருதி வந்தனர். அது தவறான எண்ணம், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற பேருண்மையைக் கண்டறிந்து ஆதார பூர்வமாக எண்பித்தவர் புகழ்பெற்ற வானவியல் அறிஞர் கோப்பர்னிக்கஸ் ஆவார்.

கோப்பர்னிக்கஸ்

கோப்பர்னிக்கஸ் போலந்து நாட்டிலுள்ள டாரூனி எனும் ஊரில் 1478ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த கோப்பர்னிக்கஸ் கிரேக்கோ பல்கலைக்கழகத்தில் லத்தீன் மொழி, கணிதம், வானவியல் ஆகிய