பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மேசை அச்சு

செல்லும் தாளில் இருபுறமும் ஒரே சமயத்தில் அச்சாகும். அச்சிட வேண்டிய தாளும் பெரும் உருளையொன்றில் சுற்றப்பட்டிருக்கும். உருளைகள் விரைந்து சுழல்வதால் வேகமாக அச்சிடலாம். மணிக்கு நாற்பதாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட இயலும். அச்சாகும் தாள்களை வேண்டிய அளவில் தானே வெட்டி மடித்து வெளியே அனுப்பிவிடும் எந்திரங்கள் உள்ளன.

கல்லச்சு எந்திரம் : 'லித்தோ' என்று சொல்லப்படும் இவ்வகை எந்திரம் மூலம் சுவரொட்டிகளும் பத்திரிகைகளும் அச்சிடப்படுகின்றன. கல் அல்லது உலோகத் தகட்டில் படங்களையும் எழுத்துக்களையும் பதித்து அச்சிடுவது லித்தோ முறையாகும். இதில் அச்சிடும் பகுதி மேடுபள்ளமில்லாது சமதளப் பரப்பாகவே

கல்லச்சுப் பொறி (லித்தோ)

இருக்கும் என்றாலும் இரு பகுதிகளுக்கும் வேதியியல் வேறுபாடு உண்டு. அச்சிடும் பகுதிகள் ஈரமாகும்போது நீரை விலக்கி மையை உறிஞ்சும். அச்சிடப்படாத பகுதிகள் நீரை உறிஞ்சி மையை விலக்கும்.

மாற்று அச்சடிப்பு : 'ஆஃப்செட்' என்று அழைக்கப்படும் அச்சுமுறையே அதிகம் புழக்கத்தில் உள்ளது. இது மறுதோன்றி என்றும் கூறப்படுவதுண்டு.

இவ்வகை அச்சு எந்திரத்தில் அச்சிட முதலில் எழுத்துக்களைக் கோத்து அச்சுப்பதிவம் (Artpul) தயாரித்துக் கொள்ள வேண்டும். அதைப் பிலிமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பிலிமை வேதிப்பொருள் பூசிய தகட்டிற்கு மேலாக அமைத்து அதன் வழியே சக்திமிகுந்த ஒளியைப் பாய்ச்சுவார்கள், கொஞ்ச நேரம் கழித்து அதனைக் கழுவினால், அதில் ஒளி படாத இடங்களில் உள்ள வேதிப்பொருள் கறைந்து போயிருக்கும். அதில் உள்ள எழுத்து

எதிரீட்டு அச்சுப்பொறி (ஆஃப்செட்)

கள், படங்கள் அப்படியே இருக்கும். இதன் மீது நீர் படியாது. ஆனால் மை ஒட்டும். மை படிந்த பகுதிகள் நேரடியாகக் காகிதத்தின் மேல் அச்சாவதில்லை. அவை ரப்பர் திரையில் அச்சாகின்றன. அதுவே மீண்டும் தாளில் பதிந்து அச்சாகும்,

வண்ணப்படங்களை அச்சிட வேண்டுமெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித் தனி பிலிம் தயாரிக்க வேண்டும். அவ்வாறே தனித்தனி தகடும் அச்சிடுவதற்கென தயாரித்து அச்சிட வேண்டும்.

சுழல் மாற்று அச்சடிப்பு : இவ்வகை எந்திரம் மூலம் ஒரே சமயத்தில் பல வண்ணங்களோடு செய்தித்தாள்களையும் பருவ இதழ்களையும் அச்சிடமுடியும்.

மேசை அச்சு : இது 'டெஸ்க்ஸ்டாப்' என்று அழைக்கப்படும். இந்த அச்சடிப்பு முறை அண்மைக் காலக் கண்டுபிடிப்பாகும். இதற்கான கருவியை வைக்க ஒரு மேசையே போதும். இயக்குவதற்கும் அதிக ஆட்கள் தேவை இல்லை. ஒரே ஆள் போதும்.