பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சுக்கோத்தல்

7

கணிப்பொறியும் ஒளி அச்சும் இணைந்த இந்த முறையில் ஒரே ஆள் அச்சுக்கோத்து, பிழை திருத்தி, பக்கம் அமைத்து அச்சிட முடியும். இந்த அச்சுமுறையில் சிறிய அளவிலான அச்சுப்பணிகள் மட்டுமே நடைபெற இயலும்

துணி அச்சு : 'ஸ்கிரீன் பிரின்டிங்’ என்று புகழ்பெற்றுள்ள அச்சுமுறை மூலம் வண்ண அழைப்பிதழ்கள், பிளாஸ்டிக் பைகளில் குறிப்புகள் மட்டுமே அச்சிட முடியும்.

அச்சுக்கோத்தல் : இன்று அழகான அச் செழுத்துக்களுடன் கூடிய நூல்களைப் படித்து மகிழ்கிறோம். ஆனால் முன்னூறு ஆண்டுகட்கு முன்பு நிலைமை வேறானதாக இருந்தது. அப்போதெல்லாம் எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதி வந்தார்கள். உளி கொண்டு செப்பேட்டிலும் கல்லிலும் செதுக்கி வந்தார்கள்.

பல நூற்றாண்டுகட்கு முன்பு அச்செழுத்து முறையைக் கண்டறிந்தவர்கள் சீனர்களாவர். அவர்களே முதன் முதலில் தாள் செய்யும் முறையைக் கண்டறிந்தவர்கள்.

சீனர்கள் கல்லில் அச்செழுத்துக்களை உருவாக்கி, அச்சிட்டு வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தான் கூட்டன்பர்க் எனும் ஐரோப்பியர் இன்றுள்ள அச்செழுத்து முறையைக் கண்டறிந்தார். பின்னர் இம்முறை விரைந்து ஐரோப்பாவெங்கும் பரவியது. அதன் பின் ஐரோப்பியர்கள் மூலம் கீழ்த்திசை நாடுகட்குப் பரவியது. இந்தியாவில் அச்சுமுறை முதன் முதலாகத் தமிழகத்தில் தான் தொடங்கியது.

பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அச்சுக்கலை பரவியபோது மர அச்செழுத்து உருவாக்கப்பட்டது. தனித்தனி அச்செழுத்துக்களை மரத்தில் செதுக்கி அம்மர எழுத்துக்களைக் கோத்துச் சொல்லாகவும் சொற்றொடராகவும் ஆக்குவார்கள். பின் அதன்மீது மையைத் தடவி, தாளில் அழுத்திப் பதிந்து அச்செழுத்தைப் பெறுவார்கள். மர அச்செழுத்துக்கள் விரைந்து தேயலாயின.

பழங்காலச் சீனர்களின் சுழலும் அச்சுப் பெட்டி

தேயாத அச்செழுத்துக்களை உருவாக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக எளிதில் தேயாத உலோக எழுத்துக்களை வார்த்தெடுக்கும் புதிய முறை உருவாகியது. கையால் உலோக எழுத்துக்களை உருவாக்குவது கடினமாக இருந்தது. அதிக நேரம் செலவிட வேண்டியதாயிற்று. இதற்காக முயன்று ஆய்வு செய்து எழுத்துக்களை வார்க்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எளிதில் தேயாமலிருக்க ஈயத்துடன் ஆன்டிமணி போன்ற வேறு சில கெட்டி உலோகங்களைக் கலந்து எழுத்துக்களை உருவாக்கலாயினர்.

இவ்வாறு வார்த்தெடுக்கப்பட்ட உலோக எழுத்துக்களை மரப்பெட்டியில் தனித்தனி அறைகளில் இடுவர். ஒரு எழுத்துக்கு ஒரு