பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசுவுணி

9

டச்சுப் பொறியை இயக்குவதுபோல் எழுத்துப் பொத்தான்களை அழுத்தினால் தாள் ஒன்றில் அது துளையாக அமையும். இது நாடா வடிவில் இருக்கும். துளையிடப்பட்ட இந்நாடாவை வார்ப்பு எந்திரத்துள் அமைத்துக் காற்றைச் செலுத்தினால் அது அச்செழுத்துக்களை அதன் துளைக்கேற்ப வார்த்து அமைக்கும்.

இம்முறைகளில் அச்சுக் கோப்புப் பணி உலோக வார்ப்பால் அமைவதாகும். உலோக எழுத்து வார்ப்பு இல்லாமலே எழுத்துக்களை அமைக்கும் புதிய முறை அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று “ஒளி அச்சுக்கோப்பு' முறையாகும். ஒளிப்பட முறையில் ஒளித்தகட்டில் அல்லது தாளில் எழுத்துக்கள் ஒளிப் பொறிப்புகளாக அச்சுக் கோக்கப்படும். இம்முறையே இதுவரை கண்டறியப்பட்டுள்ள முறையில் விரைவானதாகும். வரி அச்சில் ஒரு விநாடிக்கு 3

கணிப்பொறி ஒளி அச்சு

முதல் 5 எழுத்துக்களே அச்சுக் கோக்க முடியும். ஆனால் ஒளி அச்சு முறையில் 80 முதல் 100 எழுத்துக்கள் வரை அச்சுக்கோக்க முடியும். ஒளி அச்சின் வேகம் மணிக்கு எட்டாயிரம் சொற்களாகும். இஃது மேலும் வளர்ச்சியுற்று கணிப்பொறி அச்சுக்கோத்தல் (Computerised type setting), மின்ம எழுத்தாக்கம் ( Electronic) போன்ற முறைகளில் இன்று அச்சுக்கோக்கும் பணி விரைவாகவும் எளிதாகவும் அழகாகவும் நடைபெற்று வருகிறது. லேசர் அச்சாக்கம் (Laser printing) இன்று புகழ் பெற்று வரும் ஒன்றாகும். சாதாரணத் தாளில் நுண்கரும்புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் இத்தகைய அச்சுக் கோத்தல் பணி நடைபெறுகிறது.


அசுவுணி : நம் விட்டுத்தோட்டத்தில் உள்ள செடி கொடிகளில் இலை, இலைகுருத்து, மொக்கு, கிளை இவைகளில் சின்னஞ்சிறு பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இப் பூச்சிகள் அசுவுணி (Aphids) அல்லது செடிப் பேன்கள் (Plant lice) ஆகும். இவற்றின்

இறக்கையுள்ள பெண் அசுவுணி

உடல் சிறியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். இவை பச்சை, பழுப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இவற்றில் 8800-க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன.

இவை செடி, கொடிகளில் தங்கி அவற்றின் சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்கின்றன. இப் பூச்சிகள் காய்கறிகள், பருத்தி, சோளம், கரும்பு, புகையிலை, ஆமணக்கு, பயறு போன்ற பயிர்களையே பெரிதும் தாக்கிப் பாழாக்குகின்றன. இவற்றால் சாறு உறிஞ்சப்பட்ட செடி கொடிகள் வலுவிழந்துவிடுகின்றன. இவைகள் வெளிறிப்போய் சுருண்டு விடுகின்றன. அசுவுணிகள் மூலம் செடிகளில் நோயைப் பரப்பும் பூச்சிகள் நல்ல செடிகளுக்குப் பரவக் காரணமாகின்றன.

அசுவுணிப் பூச்சிகள் ஆறுகால்களையும் பருத்த உடலையும் மிகச்சிறிய தலையையும் கொண்டுள்ளன. இதன் தலையில் இரு கண்களும் இரு உணர்வு கொம்புகளும் உள்ளன சில வகை அசுவுணிகளுக்கு முன்பின்னாக இரண்டு இணை இறக்கைகள் உள்ளன. முன் இறக்கைகளைவிட பின் இறக்கைகள் சிறியவையாகும். சிலவகை அசுவுணிகளுக்கு இறக்கை