பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மூக்கு

மட்டும் வாழக்கூடிய மீனினங்கள்; நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரிகள் நிலத்திலும்

முதுகெலும்புள்ள உயிரினங்கள்

மரத்திலும் ஊர்ந்து வாழ்வன, பறக்கும் இயல்புடைய பறவைகள்; பாலூட்டிகள் ஆகியனவாகும். மனிதன் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவனாவான்.


மூக்கு : மனிதனுக்குள்ள ஐம் பொறிகளில் மூக்கு முக்கிய உறுப்பாகும். நாம் காற்றைச் சுவாசிக்கவும் மணத்தை நுகரவும் மூக்கே வழியாயமைந்துள்ளது. மூக்கின் நடுப்பகுதியிலுள்ள குருத்தெலும்பு மூக்கை இரு துவாரங்களாகப் பிரிக்கிறது. இருமூக்குத் துவாரங்களின் உட்பகுதியில் இரு மூக்குக் குழாய்களாகத் தொண்டையுடன் இணைகின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்று தொண்டை வழியாக மூச்சுக் குழாய் மூலம் நுரையீரலை அடைகிறது.

மூக்குக் குழாய்களின் உட்புறம் ஈரப்பசையுள்ள மெல்லிய கோழைச் சவ்வால் மூடப்பட்டுள்ளன. அத்துடன் மெல்லிய மயிரிழைகளும் உண்டு இதன்மூலம் நாம் சுவாசிக்கும் காற்றிலுள்ள தூசிகள் முக்கு மயிரால் தடுக்கப்படுகிறது. அல்லது முக்கிலுள்ள ஈரப்பசையுள்ள கோழையில் ஒட்டிக்கொள்வதால்

முக்கின் வெட்டுததோற்றம்

நுரையீரலுக்குச் செல்லாமல் தடுக்கபடுகிறது.

மணத்தை நுகர்ந்தறியும் புலனாகவும் மூக்கு பட்டுள்ளன. அத்துடன் மெல்லிய மயிரிழை அமைந்துள்ளது. இதற்கேற்றவாறு ஒவ்வொரு