பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்

விட்டு தன் தலையிலனிந்திருந்த தொப்பி (Hat) யைக் கையி' லெடுத்துக் கொண்டு குனிந்து என்னைக் கூர்ந்து நோக்கிய வண்ணம், யாரது இந்நேரத்தில் இங்கு தனியே எதற்காக கின்று கொண்டிருக்கிருய்!” என்று ஆங்கிலத்தில் அமர்த் தலோடு கோட்டான். இவனது குரல் எனக்கு அறிமுக மான யாரோ ஒருவருடைய குரல்போல் தோன்றியது. ஆனல் இச்சமயத்தில் அது யாருடையதென்று திட்டமாக கிர்ணயிக்க முடியவில்லை. மேல் அவ்விருட்டில் அவனது முகம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, நான் அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது மெல்ல நகர லானேன்.

எனது மெளனத்தையும் செயலேயும் கண்ட அவ்வாங்கி லேயன் உடனே குதிரையை விட்டுக் குதித்து என் அருகே விரைந்து வந்தான். எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட பயத் தைக் காட்டிலும் இப்போது மிகுந்த அச்சம் உண்டா யிற்று. சூடுண்ட பூனேயல்லவா! இவ்வெள்ளே வாலிபன் தனியாயிருக்கும் என்னே என்ன செய்வானே என்று மனங். கலங்குவது இயற்கைதானே! எனவே, நான் சிறிது அடி யெடுத்து நடந்தேன். அவன் என்னே யனுகி ஏதேனும் துன்புறுத்த முயன்ருல், உரக்கக் கூக்குரலிட்டுப் பிறர் உத. வியை நாடவுங் தீர்மானித்தேன். இவ்வளவு தூரம் ஆயத்த மாக இருந்து நான் நடந்துகொண்டிருக்கையில், குதிரை , யில் ஏறிவந்த வாலிபன் எனக்கு முன்னே நடிந்து வந்து வழிமறித்து கின்று என்னைக் கூர்ந்து நோக்கினன். நான் நடப்பதை விட்டுத் தலை குனிந்து நின்றேன். அடுத்த கணம் அவ்வாலிபன் ஆச்சரியத்தால் துள்ளிக் குதித்து, புவன நீயா? இதென்ன கோலம்! இந்நேரத்தில் எங்கே தனியாகச் சென்று விட்டு ஒட்டமும் நடையுமாக ஓடி வருகிருப்!.