பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பட்டிருந்தது; போன வார ஹிந்து பேப்பர்களைப் பார் “................ ’ என்று சொன்னர். -

'அப்படியா' என்று கூறி உற்சாகத்தோடு எழுங் திருக்கப் போகுஞ் சமயத்தில், வேலேயாள் ராமன் அங்கு தோன்றிப் பணிவாக என் கையில் ஒரு கடிதத்தை நீட்டிய வண்ணம், 'அம்மா இந்த கடுதாசியை சேற்று இராத்திரி நீங்க வாதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் চত ஆள் கொடுத்துவிட்டுப் போனன். நீங்கள் ரொம்ப நேரம், பொறுத்து வந்தீங்களே என்ற கவலையிலே இ.தெ அப்பவே: கொடுக்க மறந்துவிட்டேன். இப்பொ நெனப்பு வந்ததும் எடுத்துக்கிட்டு ஓடி வந்தேன் கோவிச்சிக்காதீங்கம்மா" என்று பல்லேக் காட்டிக் கெஞ்சிக் கூறினன். ராமன் ஒரு. அப்பாவி. அவனைப்போல அசட்டை இவ்வுலகத்திலேயே காண முடியாது என்பது என் கருத்து. ஆகவே, நான் அதுபற்றி அவனேயொன்றுங் கடிந்து கொள்ளவில்லை.

பின்னர், ராமன் என் தந்தையைப் பார்த்து, எஜமா னைப் பாக்கணம்னு யாரோ ஒரு ஐயா காத்துக்கிட்டு இருக் காங்கோ-வரச் சொல்லட்டுங்களா' என்று மிகச் சாவ: தானமாகக் கேட்டான்.

،مسابقه தடிாமா! அப்பவே எண்டா சொல்லல. உடனே ப்ோய் வந்தவரை உள்ளே அனுப்படா" என்று. ஆதட்டினர் என் தந்தை. w -

o யாரோ என் தந்தையைப் பார்க்க வந்திருக்கிருர், என்று அறியவே, நான் அங்கிருப்பது உசித மல்லவென்று எண்ணிக் கடிதத்தைப் பிரித்தவண்ணம் அடுத்த அறைக்கு மெல்ல கழுவினேன். அங்கு நான் கடிதத்தைப் பிரித்து பார்த்ததும், அது புரொபலர் சம்பத் ஐயங்காரர்ல் எழுதப். புட்டிருப்பதறிந்து ஆவ்லோடு விஷயத்தைப் படிக்கலா,