பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்ணா ! பேயா !! தெய்வ மகளா ! ! !

5

மேற்குக் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள விரைந்து சென்றான். தன் பகைவன் மாள்வதைப் பார்த்து மகிழும் நோக்கத்தோடு, சந்திரன் சிரித்துக்கொண்டே கிழக்குப் பக்கம் தோன்றினான். இதற்கிடையே இருள் அரக்கன் தன் ஆட்சியைச் செலுத்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். தென்றற் காற்று மிக ரமணீயமாக வீசத் தொடங்கியது. இயற்கை அன்னை வழங்கிய அழகிய காட்சியில் யான் என் துன்பங்களையெல்லாம் மறந்து வசப்பட்டிருந்தேன்; ஆயினும், மேலே யான் கேட்ட இனிய பாடலைப் பாடியவர் யார் என்பதை யறிய என் மனம் பெரிதும் விரும்பியது. ஆகவே, நான் நாலா பக்கமும் என் கண்களைச் செலுத்தி ஆராயலானேன். அச் சமயத்தில் மீண்டும் கீழ்வரும் பாடல் காற்றில் மிதந்து வந்தது.

“வஞ்ச வினைக் கொள்கலனாம் உடலைத் தீவாய் மடுக்கிலேன்
வரை யுருண்டு மாய்ப்பே னல்லேன்
நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லன்
நாதனே யதுவும் நினது உடமை யென்றே
அஞ்சினேன் தானேயும் அழியாது ஆவி
ஐயனே நினைப்பிரிந்தும் ஆற்றகில்லேன்
என்செய்கோ ! எந்தாயோ! எந்தாயோ!
.........................................”


இவ்வமுதத் துளிகள் செவிவழியாகப் பொழிந்து என் தேகத்தைப் புளகாங்கிதமடையச் செய்தன. எனவே, என் பசிப்பிணியும் களைப்பும் பறந்தோடின. நான் பாட்டு இசை வரும் திசையை நோக்கி மலைமீது ஏறினேன். நான் சென்ற வழி தேய்ந்த பாதையல்லவாதலால், என் காலில் ஆங்காங்கு வேலம் முட்கள் தைத்து, உபத்திரவஞ் செய்தன. அதுவன்றி, சில இடங்களில் செங்குத்தாகவும் காடு முரடாகவும் இருந்ததால் நான் மலைமீது ஏறுவது சிறிது சிரம