பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

களங்கமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரிய ஆறுதலாயிருந்தது. குழந்தையைப் பாராட்டுவதிலும், சீராட்டுவதிலும் என் கவன முழுதுஞ் சென்றுகொண் டிருந்ததால், என் துன்பத்தையெல்லாம் மறந்திருந்தேன். ஆனல் சில சமயங்களில் குழந்தை அம்மா! அம்மா!" என்று மழலை மொழியால் கூப்பிட்டுக்கொண்டே என்னை நோக்கித் தவழ்ந்து வருகையில் எனக்குத் துக்கம் மிகுவ துண்டு. ஏன்? அம்மா' என அழைக்கும் என் அருமைக் குழந்தை நாளே அப்பா' என்று யாரை அழைக்கும்: அதற்க் அறிவு வந்த காலத்தில், அம்மா! என் அப்பர் எங்கே?' என்று கேட்டால் நான் என்ன பதில் சொல் வேன்? உன் தகப்பன் கொலை பாதகன் துரோகி நீ வயிற்றிலிருக்கும்போதே என்னே எமாற்றி நடுத்தெருவில் அலேய விட்டுவிட்டான்” என என் கதையை அளந்தால் அது சமாதான மடையுமா?-என்னேயுங் குழந்தையையும் பார்க்கும் பிறர், 'உன் கணவன் எங்கே? இக்குழந்தையின் தகப்பன் எங்கிருக்கிருர்?' எனக் கேட்பின் நான் எவ்வாறு தலே குனியாது பதில் சொல்ல முடியும்? என்றிவ்வாறெல் லாம் நினைவுண்டானல் என் கேவல கிலேமைக்காக கண்ணிர் விட்டுக் கதருமலிருக்க முடியுமா? இந்து சமூகக் கட்டுப்பாட் டின்படி எனது நெறிகெட்ட வாழ்க்கை தூய்மையடையப் பரிகாரங் தேட முடியாதாகையால், நடந்ததைப்பற்றி கினைந்து வருந்துவதில் பயனில்லை எனக் கண்டு மனம் தேறினேன்.

குழந்தைக்கும் ஒரு வயது பூர்த்தியாயிற்று. ராஜம் மாள் எனது குழந்தைக்குக் குமுதவல்லி என்ப் பெயரிட் டார். அவர் என்னிடமும் குழந்தையிடமும் பிரியமா யிருந்தாா; ஆயினும், சமீபத்தில் சிலகாலமாக, அவரது நடத்தையில் எனக்குச் சந்தேக மேற்பட்டது. அவரிடம்