பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா !! தெய்வ மகளா ! 23

அவள் புன்சிரிப்போடு, இப்பழங்கள் எவ்வளவு இனி மையாக இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு, என் வாழ்க்கை வரலாறு மிகக் கசப்பாக இருக்கும். அதை உம் காதுகள் எவ்வாறு கேட்டுச் சகிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறிஞள்.

நான், அக்கரையில்லை; நீ அதைப்பற்றிக் கவலேப்பட வேண்டாம். நீ இப்போது பேசிவரும் பீடிகையும், உப -சா வார்த்தையுமே எனக்குக் கசப்பா யிருக்கிறது. அது தவிர, நீ எவ்வளவு சீக்கிரம் உன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிருயோ அவ்வளவுக் கவ்வளவு எனக்கு மிகத் கிருப்தியாக இருக்கும்.

'செவிக்கு உணவிலாத போத்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.”

என்று தமது தமிழ் நாவலர் சொல்லியிருப்பது உனக்குத் தெரியுமென்று கினைக்கிறேன். என் செவிக்கு விருந்து கொடுக்க வேண்டிய சமயத்தில், அதைத் தடைப்படுத்தி போடப்போட தூர்ந்து போகாத பேராசை மிகுந்த இவ் வற்ப வயிற்றுக்கு விருந்துவைக்க நீ ஆரம்பித்துவிட்டது கான் எனக்குச் சிறிதும் சகிக்கவில்லை. ஆதலால் இனியும் பேச்சை வளர்த்தாது உன் வரலாற்றைக் கூற ஆரம்பியும்' என்று என் தமிழ்ப்புலமையைக் காட்டிப் பட படப்பாகப் பேசினேன். -

அம்மங்கை ஆச்சரியமாகவும், குறும்பாகவும் என்னைப் பார்த்து,"அப்படியா அத்துணை ஆவலா அவ்வளவு அவ. சரமா என் வரலாற்றை யறிய” என்று கேட்டுக்கொண்டே கூஜாத், கண்ணிரைக் குடித்துவிட்டு எழுந்த நான் கின்று விட்டு வைத்திருந்த பழத்தட்டையும், கூஜாவையும் எடுத்து ஒன்ாக வைத்தாள்.