பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தரியின் இளம் பருவம் 37.

வாறு என்னத் துரோகஞ் செய்துவரும் அவளே நான் இன்னமும் வெறுக்கவில்லை; அவளிடம் எவ்வித வேறு பாடுமின்றி முன்போலவே நடந்து வருகிறேன். இவ் விஷயத்தை இதுவரை யாருக்குக் தெரிவிக்கவில்லை. பேச் சோடு பேச்சாகக் குறிப்பாகக்கூட உன் தங்தைக்குச் சொல்லவில்லை. அவர் உன்மீது தம் உயிரையே வைத்திருக் கிருள். உன் பேரழகையும் துண்ணறிவையும் கண்டு அவர், ஆனந்த வெள்ளத்தில் அழுந்திப் போயிருக்கிருர். இங்கிலே யில் அவர் தம் தம்பிக்கு நியாயமாகச் சேரவேண்டிய சொத்துப் போக, மற்றனைத்தையும் உனக்கும், உன்னை மணஞ் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கும் வைப்ப தென்று அடிக்கடி கூறிவருகிருர். இத்தகவல் என் கங்கை காதில் விழுந்திருக்கிறது என்று கருதுகிறேன். அவள் தன் எண்ணத்துக்கு மறுபடியும் பழுது ஏற்பட்டு விடும்போ லிருக்கிறது என்று எண்ணி மீண்டும் சூழ்ச்சி செய்ய ஆரம் பித்திருப்பதாகத் தெரிகிறது. ஐயோ! கொடுங் குணங் களுக்கு இருப்பிடமான அவள் இன்னமும் என்ன சூழ்ச்சி செய்வாளோ? அதிலிருந்து உன்னே எப்படித் தப்புவிப்பதுt. என்று எனக்கு மிகவும் மலைப்பா யிருக்கிறது. உள்ள விஷ் யத்தை உன் தந்தையிடம் தெரிவித்து இதற்குப் பரிகாரக் தேடலாமென்ருலோ, இதன் மூலமாக விபரீத மேதேனும் எற்பட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறேன். இக் கிலேயில் இதை மெல்லவுமாட்டாமல், விழுங்கவுமாட்டாமல் நான் தத்தளித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே என் துயரத்துக்குக் காரணம். வேருெரு குறையும் எனக்கு, இல்லே பம்மா' என்று சொன்னுள்.

என் பொருட்டாக, என் தாய் படும் துயரத்தைக். கேட்டு என் இளநெஞ்சம் பாகா அருகிவிட்டது. கான்