பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

டும். அப்போது தான் அவர்கள் எழுதுங் கதைகளில் சிருஷ்டிக்கும் பாத்திரங்களின் குணஞ் செயல்களை உள்ளபடி வருணிக்கமுடியும். இம்முறையையும், தத்துவத்தையும் ஒட்டியே, யான் சில புதுக் கதைகளைப் புனைந்திருக்கிறேன். “இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்” என்னும் இக்கற்பனைக் கதையும் இம்முறையை யொட்டியதேயாகும். இம் முயற்சியில் நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆயினும் உண்மைச் சம்பவங்களை யடிப்படையாகக் கொண்டு யான் வரைந்த “யான் ஏன் பெண்ணாய்ப் பிறந்தேன்?” “காதலனா? காதகனா?” முதலிய புதுக் கதைகள் தமிழ் மக்கள் பேராதரவைப் பெற்றதிலிருந்து, எனக்கு இம் முயற்சியில் உற்சாகமும், ஊக்கமும் மேலும் உண்டாகி யிருக்கிறது. ஆகையினால்தான், நான் இக்கதையை, தமிழ் நாட்டிலேயே, தமிழ் மொழியின் மறு மலர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான பிரசண்ட விகடன் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். “விகட”னில் இக்கதையைத் தொடர்ந்து வாசித்து வந்த அன்பர்கள் இது புத்தக உருவில் வெளிவர வேண்டுமென்று விரும்பியமையால் அவ்வாறே இப்போது வெளியிடப்பட்டது.

செல்வத்திலேயே பிறந்து செல்வத்திலேயே வளர்ந்த புவன சுந்தரி என்னும் பெண்மணி, நம் மகளிர்க்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஆங்கிலக் கல்வியைக் கற்று, மேனாட்டுப் போலி நாகரி