பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


திருக்குர்ஆனின் வசனங்கள், நடைமுறை இவைகளைப் பின்பற்றி இஸ்லாமிய மன்னர்கள் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவாகக் கூறி, இஸ்லாத்தையும் மன்னர்களையும் பற்றித் தவறான கருத்துகளைச் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டுதற்குரியது. 94-ம் பக்கத்தில், நான்காவது கலீபாவான அலி (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பைசாந்தியப் பகுதியில் வாழ்ந்த கிருத்தவ மக்களைத் தூண்டிய இரண்டாம் கான்ஸ்டாண்டின் வேண்டுகோளை உதறித்தள்ளி, அந்தக் கிறிஸ்தவ மக்கள், “உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சமய விரோதிகளாகப் படலாம். ஆனால் நாங்கள் ஒரு கிறித்துவ ஆட்சியில் பெற முடியாத முழுமையான மதச் சுதந்திரத்தோடு வாழ்கிறோம்” என்று கூறிய வரிகளும் 196-ம் பக்கத்தில் விவேகாநந்தரின் ‘எதிர்கால இந்தியா’ எனும் நூலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ள ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லிம் ஆட்சி சுதந்திரம் அளித்தது; அதன் காரணமாகத்தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிம்களானார்கள், கத்தியும் நெருப்பும் கொண்டே இம்மத மாற்றம் அனைத்தும் நடந்தது என நினைப்பது பைத்தியக்காரத்தனம்” என்ற வரிகளும், மேற் சொன்ன கருத்தினை விளக்குகின்றன.

நபிகள் பெருமானாரின் வாழ்ந்து காட்டிய முறைகள், திருக்குர்ஆன் கூறும் கருத்துகள், மாற்று மதத்தையும் மதத்தாரையும் இஸ்லாத்தின் பக்கம் வர வற்புறுத்தக் கூடாது என்ற ஆணித்தரமான கருத்துகளையும் பக்கம் 53-லிருந்து 94-வரை பல எடுத்துக்காட்டுகள் மூலம காண முடிகிறது.

அதோடு சமயநல்லிணக்கத்திற்கு ஆசிரியர் பக்கம் 204-ல் கூறும் “சாதாரணமாக இரு சமயங்களைச் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படை