பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

யும் எந்த அளவுக்கு போலித்தனமும் பொய்மையும் கொண்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.

இதற்கு மாறாக, அம்மதத்தவர் முஸ்லிம்கள் பின்பற்றும் கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவரல்ல என்றோ, தான் வணங்கும் முறையில் இறைவணக்கம் செய்யவில்லை என்ற காரணத்துக்காகவோ ஒரு முஸ்லிம் பிற மதத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கும் உரிமை ஒரு முஸ்லிமுக்கு இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் ஒரு மதக் கருத்தின் வடிவம், காலப் போக்கில் எவ்வாறெல்லாம் மனிதர்களின் மாற்ற திருத்தங்களுக்கு ஆட்பட்டு, மூல வடிவை இழந்து நிற்கும்பாங்கை, இறைத் தூதர்களின் மூலக் கருத்தை இயன்றவரை இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் அடிப்படையில் விளக்கி உண்மையை உணரத் தூண்டுவதில் தவறேதும் இல்லை.

சமய அறிவின்மையே
அனைத்துப் பிரச்சினைக்கும் அடிப்படை

பிற சமய அன்பர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இஸ்லாமிய உணர்வுகளை, சிந்தனைகளை, எடுத்து விளக்கினால் அவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதுமட்டுமல்ல, இஸ்லாமியத் தத்துவ நுட்பங்களை எளிய முறையில் எடுத்துக் கூறினால், அவற்றைப் படித்து மனதுள் இறுத்தி, அவற்றை ஆழச் சிந்திக்க அளாவும் உள்ளங்கள் பல இருப்பதை மறுக்க முடியாது. இதன் வாயிலாக இஸ்லாத்தை உரிய முறையில் அணுகாமலும் அறியாமலும் அதன் மீது தவறான கண்ணோட்டம் செலுத்தி வருபவர்கள் தங்கள் தவறான உணர்வையும் கருத்தையும்