பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


ஏன் இத்தனை நபிமார்?
இத்தனை வேதங்கள்?

மனித குலத்துக்கு வழிகாட்ட ஆதாம் (அலை) தொடங்கி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வரை இறை தூதர்களாக வந்த ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்களுக்கு முப்பத்தியாறு வேதங்களை வழங்கியதாக இஸ்லாமிய மரபு வழிச் செய்தி கூறினும், ஒரே விதமான அடித்தளத்தைக் கொண்ட வேதச் செய்தியை ஏன் இறைவன் மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும்? இவற்றை மக்களிடையே பிச்சாரம் செய்து பரப்பி நிலை நிறுத்த இத்தனை தீர்க்கதரிசிகளை ஏன் மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆதாம் (அலை) முதல் அண்ணலார் (சல்) அவர்கள் ஈராக வந்த நபிமார்கள் அனைவரும் ஏக இறைவனாகிய ஒரே இறைவனையே வணங்கப் பணித்தனர் என்பதை நபிமார்கள் வரலாறுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. அவர்கள் வாயிலாக இறைவனால் மக்களுக்கு அருளப்பட்ட இறை வேதங்களும் ஏக இறைவனையே வணங்கப் பணித்தன. இவ்விறை நெறிக்குப் புறம்பாக எந்த ஒரு தீர்க்கதரிசியும் தங்கட்கு இறைத் தன்மையும் அதீத சக்தியும் இருப்பதாகவோ, தங்களையே இறைவனாக மக்கள் வணங்க வேண்டுமென்றோ கூறியதாக எந்தக் குறிப்பும் இல்லை. ஒவ்வொரு இறை தூதரும் பரம் பொருளாகிய ஏக இறைவனையே வணங்கப் பணித்தார்கள்.

ஆனால், இவ்வாறு சரியான நேர்வழியில் இறைநெறி புகட்டி வழிகாட்டிய இறைதூதர்-தீர்க்கதரிசி மறைந்த பின்னர், அவரைப் பின்பற்றி வந்தவர்கள், அவர்மீது கொண்ட அன்பு, பாசம், மரியாதை ஆகியவைகளின் காரணமாக, அவர்மீது கொஞ்சங் கொஞ்சமாக இறைத்