பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

அந்தரத்தில் ஓராறுண்டது
எமக்குக் கூறுமென
சுந்தரத்தோள் இபுனு சலாம்
சுருதி வழியே கேட்க,’

என்று கேட்டதாக பாடல் வருகிறது.

மண்ணிலிருந்தும் ஓடவில்லை. விண்ணிலிருந்தும் விழவில்லை. ஆனால், அந்தரத்தில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆறு என்ன ஆறு? என்று கேள்விக் கணை தொடுக்கிறார். அதற்கு மறுமொழியாக, 'அந்தரத்தில் ஓடுகின்ற அந்த ஆறு, உழைக்கும் மக்களின் முதுகிலிருந்து சரம் சரமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறதே வியர்வை நீர், அது தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆறு' எனப் பதிலளித்ததன் மூலம் உழைப்பின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்தினார் என்றால் இதற்கு மேல் உழைப்பின் பெருமையை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.

மீலாது விழாவும் கய விமர்சனமும்

பெருமானாரின் பிறந்த நாள் விழாவிலே அவரை, அவரது பணிகளை வெறுமனே புகழ்ந்துரைத்து விட்டுப் போவதில் எந்தப் பயனுமில்லை என்பதை நாம் உணர வேண்டும். இத்தகைய மீலாது விழாக்கள் உண்மையிலேயே மிகு பயன் விளைவிப்பதாய மைய வேண்டு மெனில், வள்ளல் நபி (சல்) தம் வாழ்வில் வெளிப்படுத்திய உணர்வுகள், சிந்தனை வழிப்பட்ட கருத்துகள், அக் கருத்துகளினடிப்படையிலான செயல்கள், வாழ்ந்து காட்டிய வழிமுறைகட்கு ஏற்ப, இறை மறையாம் திருமறையிலே சொல்லப்பட்ட நெறிமுறைகளுக்கு ஒப்ப நாம் எந்த அளவு வாழ்ந்திருக்கிறோம்; அல்லது வாழ இயலாமல் போயிருக்கிறோம் அல்லது ஆங்காங்கே ஏற்பட்ட சறுக்கல்