பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

257



இவ்வுலக வாழ்வின்போது பலதையும் பேசிப் பழக்கப்பட்டுப் போன வாய், வழக்கம்போல் பொய் புரட்டுகளையும் இணைத்துப் பேச முனைந்துவிடும் என்பதற்காக, அதைத் தவிர்த்துள்ள பிற உடல் உறுப்புகளெல்லாம் உள்ளதை உள்ளபடி பேசும். குறிப்பாக 'உடல் தோல் பேசும்' என்பது இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.

'தோல் பேசுமா?' என்ற கேள்விக்கு டாக்டர் ஆர்லன் கார்னி எனும் அமெரிக்க விஞ்ஞானி தன் நீண்ட நாள் ஆய்வின் விளைவாக 'தோல் பேசும்' என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரது அறிவியல் ஆய்வுக்கு அவர் வைத்துள்ள பெயர் 'Skin Speech' என்பதாகும்.

"செவிப்பறை கிழிந்துவிட்டாலோ, நோய்வாய்ப் பட்டாலோ, பிறகு காதுகளால் ஒலிகளைக் கிரகிக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சில எலெக்டிரானிக் இயந்திரப் பொறிகளின் துணைகொண்டு உடல் தோலையே 'காதுகளாக'ப் பயன்படுத்தலாம்" என 30.5.84 அன்று வெளியான டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழில் அவரது விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.

இதிலிருந்து திருக்குர்ஆனில் இறைவனால் கூறப்பட்டுள்ள ஆன்மீகக் கருத்துகள் ஒவ்வொன்றையும் அறிவியல் அடிப்படையில் ஆயும்போது, அவற்றின் உட்பொருளும் தெளிவான கருத்துகளும் நமக்குத் தெள்ளுதின் புலனாகின்றன.

'தோல் பேசும்' என்ற கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்கினால் உங்களுக்கு எளிதாகப் புரியுமென எண்ணுகிறேன்.

நம் காதிலே ஒலிகளைக் கேட்பதற்கென்று 'செவிப்பறை' என்ற மெல்லிய சவ்வு ஒன்று உண்டு. இது மென்மை