பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263

அன்பளிப்புத் தொகையாக வாழ்க்கைப் பணமாக முன்னதாகத் தந்த பின்னரே மண முடிக்க வேண்டும் என விதி வகுத்தது. பெருமானார் (சல்) அவர்களும், "திருமணத்தின் போது மணமகனுக்கு அவனுடைய மஹர் தொகையை கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள்" என்று பணித்துள்ளார்.

அண்ணலார் வழிக்கு
மாறுபாடாக

நாயகத் திருமேனியின் வாக்கை மட்டுமல்ல, இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் பெண் வீட்டாரிடம் ஆயிரக்கணக்கில் பணமும் தங்கமும் வைரமும் வரதட்சிணையாகக் கேட்டுப் பிழிந்தெடுக்கிறார்கள். பெண்ணுக்கு மஹர் கொடுப்பதற்கு மாறாகக் கைக்கூலி கேட்டு கையேந்திட பெண் வீட்டாரிடம் நிற்கிறோமே என்ற வெட்கம் பெரும்பாலோருக்கு இருப்ப தில்லை. திருமணம் என்றால் மணப் பொருத்தம், குணப் பொருத்தம் பார்ப்பது இயல்பு. ஆனால், இன்று பணப் பொருத்தமும் நகைப் பொருத்தமுமே பார்க்கப்படுகிறது. அன்றாடங்காய்ச்சியாக கூலித் தொழில் செய்யும் முஸ்லிம் கூட பல ஆயிரங்களையும் நகை நட்டுகளையும் எதிர் பார்ப்பது - வாடிக்கையாகிவிட்டது. இதனால் வறுமை வாய்ப்பட்ட பல நூறு இளங்குமருகள் விடியலை நோக்கித் தங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

அரபகத்தில் அவதி

நம் நிலைதான் இப்படி என்றால், அரபு நாடுகளில் வேறொரு கொடுமை தலைதூக்கி, ஆண்களை அவதிக்குள்ளாக்கிக் கொண்டுள்ளது. இதை விளங்கிக் கொள்ள அண்மையில் எகிப்தில் எனக்கேற்பட்ட கசப்பான அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.