பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

279

ரத்னா அபுல் கலாம் என்ற அற்புத விஞ்ஞானி. இது வளரும் வரலாறு.

இதற்கெல்லாம் அடித்தளக் காரணம் இஸ்லாம் போதிக்கும் உணர்வு, கொள்கை, கோட்பாடு. ஒரு முஸ்லிம் எந்த மண்ணில் வாழ்கிறாரோ அந்த மண்ணுக்கு நன்றியுள்ள வராக வாழவேண்டும். அந்த மண்ணில் வாழும் மக்களிடத் திலே உள்ளன்பு காட்ட வேண்டும். எந்த மண்ணின் ஆட்சியில் நீ வாழ்கிறாயோ அந்த மண்ணின் ஆட்சிக்கு நீ உண்மையாக இரு என்பதுதான் இஸ்லாமிய போதனை, பெருமானார் வாழ்ந்துகாட்டிய வாழ்வியல் முறை.

ஒரு மனிதனிடம் நன்றியுணர்ச்சி இருக்கிறதென்றால் அவனுக்கு நிச்சயம் மனசாட்சி இருக்கும். அவ்வுள்ளத்தில் நீதி, நேர்மை பொங்கும். அத்தகைய உள்ளத்தின் மூலம்தான் இறைத் தொடர்பு ஏற்படுகிறது.

இஸ்லாத்தின் உயிரோட்டமான நீதி நேர்மை என்ற உணர்வுகள் மனச்சாட்சியைத் தூண்டும் ஊக்கிகளாகும். இதற்கு இலக்கணமாய் அமைந்த நிகழ்வு ஒன்றை இங்குக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்

அலீ (ரலி) ஓர் அரிய சான்று

அலீ (ரலி) அவர்கள் நான்காவது கலீஃபாவாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரிடத்திலே ஒரு இரட்டை வாள் இருந்தது. அது. அவரிடத்திலே இருந்தவரை அவரை யாராலும் வெல்லமுடிந்ததில்லை. அவ்விரட்டை வாள் எப்படியோ கை மாறி ஒரு யூதன் கைக்குப் போய்விட்டது. அவ்வாள் தன்னிடம் இருந்தால்தன் பரம்பரைக்கே பெருமையாக அமையும் எனக் கருதி, அவ்வாளை மறைத்து விட்டான். ஆனால், நாட்டின் ஆட்சியாளரான கலீஃபா அலீ (ரலி) அவர்கட்கு வாள் இருக்கும் ரகசியம் தெரிய வருகிறது. அவர் நினைத்திருந்தால் தன் ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களுக்குள் இரட்டைவாளைப் பெற்றிருக்க