பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286


உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் பல புதுமையான, மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் வர்க்கத்துக்குப் பெரும் பயன் அளிக்கவல்ல பல திட்டங்களைக் கொண்டுவந்து சட்டமாக்கினார். அவற்றில் ஒன்று நிலச் சீர்திருத்தச் சட்டம்.

இரண்டு ஆண்டுகள் யாரவது தங்கள் நிலத்தைப் பயிரிடாமல் தரிசாகப் போட்டிருந்தால், அந்த நிலத்தினுடைய உரிமையை அவர் இழந்து விடுவார் என்பது சட்டம். அந்த நிலத்தை எவரொருவர் பயிரிட முன் வருகிறாரோ அவருக்கு அந்நிலத்தின் அனுபோக பாத்தியதை போய்விடும் என்பது விதி.

பிலால் (ரலி) அவர்கள் போர்களில் முனைப்புடன் போரிட்டதற்காக ஒரு நிலப்பகுதி அவருக்கு அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிலால் (ரலி) அவர்கள் அந்நிலத்தில் பயிரேதும் செய்யாமல் இரண்டரை வருட காலம் தரிசாகப் போட்டிருந்தார். இதை ஒரு முஸ்லிம், உமர் (ரலி) அவர்களிடம் வந்து "உமர் அவர்களே, இரண்டாண்டுகள் தொடர்ந்து பயிரிடப்படாமல் நிலத்தைத் தரிசாகப் போட்டிருந்தால், அந்த நில உரிமை போய்விடும். பயிரிடக் கூடியவர் பயிரிடலாம் எனச் சட்டம் வைத்துள்ளீர்கள். ஒருவருடைய நிலம் இரண்டரை ஆண்டுகளாகப் பயிரிடப்படாமல் தரிசாகக் கிடக்கிறது. பலபேருக்கு உணவு தரக் கூடிய அந்தத் தரிசு நிலத்தை எனக்கு அளித்தால், மக்களுக்கு உணவு அளிக்க வாய்ப்பேற்படுமே" என்று கூறியதைக் கேட்ட உமர் (ரலி) அந்த நிலத்தை யார் நிலம் என்றுகூட பாராமல் பயிரிடக் கோரியவருக்கே கொடுத்தார். அவரும் பயிரிடலானார்.

பிலால் (ரலி) அவர்கள் வெளியூரிலிருந்து திரும்பிய போது, யாரோ தன் நிலத்தில் பயிரிட்டிருப்பது கண்டு பதைத்தார். உடனே உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறை