பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர்க்கும் உதவி செய்யாமல், ஏதும் இன்பம் அடையாமல், பவுனுய்ச் சேர்த்துத் தினம்தினமும் பார்த்துக் காத்து வருகின்றீர். ஒற்றைக் காசை கானெடுத்து ஒளித்தது மிகமிக மிகப்பெரிய குற்றம் என்றீர்; என்னையுமே கொல்லுவ தாக மிரட்டுகிறீர் ! ஒற்றைக் காசை ஒளித்ததற்கே உயிரை வாங்குவ தெனச்சொன்னல், இத்தனை காசையும் ஒளிப்பவர்க்கே எப்படித் தண்டனை கொடுப்பதுவோ !” என்றே கூறிப் பொற்காசை எறிந்தது: குருவி பறந்ததுவே! ஒன்றும் கூறிட முடியாமல் உயரப் பார்த்தனர் கருமியுமே!