பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதனைக் கேட்ட வணிகன் உடனே

எழுந்து கோபமாய்,
"என்ன சொன்னுய்? கழுதை யோடு
நிழலும் சேர்க்ததே.

அதற்குத் தனியே செப்புக் காசும்

தருவேன் என்றோ நீ
ஆசை கொண்டாய், மடையா!" என்றே
ஏச லாயினன்.


"நானோ மடையன்?" என்று கூறி

அந்த வணிகனை .
நன்கு பிடித்துத் தள்ளி விட்டுக்
கழுதைக் காரனும்,

தானே அங்தக் கழுதை கிழலில்

அமர்ந்து கொண்டனன்.
தாங்கொ ணாத கோபத் தோடு
வணிகன் பாய்ந்தனன்.


கைக லங்து சண்டை அவர்கள்

போட லாயினர்.
கழுதை அந்தச் சமயம் பார்த்தே
ஒடி விட்டது!

ஐயோ, கழுதை கழுதை' என்று

முனியன் கதறினன்.
அடடா சரக்குப்போச்சே!” என்று
வணிகன் அலறினன்!

53

2994—4