உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விறகு வெட்டி மரத்தினை
வெட்டிக் கொண்டே இருந்தனன்.
அருகில் சிங்கம் வந்தது;
அவனைப் பார்த்து விட்டது!

சிங்கம் அருகில் வருவது
தெரிந்த வுடனே அவனுமே
அங்கி ருந்து வேகமாய்
அலறிக் கொண்டே ஓடினன்.

சிங்கம் அவனைத் தொடர்ந்துமே
சென்று பிடித்து விட்டது!
‘எங்கே ஓடப் பார்க்கிறாய்?’
என்று மிரட்டிக் கேட்டது.

‘மிருக ராஜ சிங்கமே,
மிகவும் கெஞ்சிக் கேட்கிறேன்;
இரக்கம் காட்டி விட்டிடு’
என்றே அவனும் வேண்டினன்.

‘உன்னை விட்டு விடுகிறேன்.
ஒன்று மட்டும் செய்திடு.
இன்றே உனது மகளை நீ
எனக்கு மணந்து கொடுத்திடு.’


62