பக்கம்:ஈச்சம்பாய்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஈச்சம்பாய்


இந்த வேவு போதாது என்பதுபோல் இரண்டுபேர். அருகிலுள்ள ராட்சத கல் மேட்டிலும் ஏறுகிறார்கள்.

அந்த வேனுக்குள் ஒரே கூக்குரல்கள். “எம்மோ... எய்யோ” என்ற புலம்பல்கள். சிறுவர்கள், இருக்கைகளுக்குள் பதுங்குகிறார்கள். பாம்படக் கிழவிகள் தலைக்கு மேல் கைதூக்கி, கடலைமாடனையும் மயான புத்திரனையும் கூப்பிடுகிறார்கள்... கைக்குழந்தைக்காரி குழந்தையை மாராப்புக்குள் மறைத்துக் கொண்டு, அந்த ஆயுதங்களைப் பார்க்கப் பயந்து கண்களை மூடிக் கொள்கிறாள்.

அதற்குள் உச்சி முதல் பாதம் வரை அழுத்தம் திருத்தமாக இருந்த சண்டியன், தொண்டர்களான குண்டர்களை அதட்டுகிறான். ரத்தக்கட்டிகளே, அவன் வார்த்தைகளாயின.

“ஏமுல பித்துப்பிடிச்சு நிக்கீக... ஆம்பளையா இல்லாதவன் மட்டும் கீழ நிக்கட்டும்... கலப்பட ஜாதிப் பயகளும் சேர்ந்து நிக்கட்டும்.... மத்தவங்க, மேலே ஏறுங்க. எதிர்ச்சாதிப் பயலுக, நம்ம சாதியில இந்த வட்டாரத்துல மட்டும் இருபதுபேரக் கொன்னுட்டான். நாம பத்துப் பேரைத்தான் கொன்னுருக்கோம். இன்னைக்கு, குறைஞ்சது பதினோரு பேரையாவது கொல்லணும். சட்டுப்புட்டுன்னு காரியத்தை முடிப்போம்.

“நேத்தே நம்ம சாதி இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லிட்டேன். சீக்கிரமா முடிச்சுடுங்கன்னு சொல்லிட்டார். இன்னும் ஏண்டா யோசிக்கீக? வழக்கு, கிழக்குன்னு எதுவும் வராம, நம்ம சாதி தலைவன்க பார்த்துக்குவாங்க. வேலையை முடிப்போம்.”

இறக்கை கிழிந்த குருவியைப் பார்த்து நடக்கும் பூனையைப் போலவே, அந்த ஆயுத பாணிகள் அசாத்தியமான நம்பிக்கையோடு அந்த வேனிற்குள் ஏறினார்கள். அவர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/104&oldid=1371787" இலிருந்து மீள்விக்கப்பட்டது