பக்கம்:ஈச்சம்பாய்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கையெடுத்துக் கும்பிட்டாலும் கும்பிட்ட கையையே வெட்டுவான்" என்று மனிதக் கீழ்மை பேசப்படுகிறது.

சொல்லோவியம்

ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியில் அச்சந்தரும் அடர்ந்த காடு: "இருபக்கமும் பாதைக்கு வேலியான தாவரக் குவியல்கள். ஈச்ச மரங்களும் பனை மரங்களும் இடித்துக் கொள்கின்றன. கோணல் தென்னை மரங்கள் ஒன்றுடன் ஒன்று குஸ்திக்குப் போவதுபோல் முனைப்போடு நிற்கின்றன. கரடிப் பயங்காட்டும் கன்றுப் பனைகள். பழுத்த நரைவிழுந்த கிழவன்போல் புழுத்த ஓலைகளோடு நிற்கும் பனைமரங்கள்... இவற்றில் சில இடிவிழுந்த உச்சிப் பொந்துகள்... முட்பாம்புகளாய் படமெடுக்கும் கருவேல மரங்கள்... அவற்றின் மேல் படரந்து உடம்பைச் சிதைத்துக்கொள்ளும் ஊணான் கொடிகள்... மற்போர் செய்வதுபோல் நெக்கியடித்து நிற்கும் சப்பாத்திக் கள்ளிகள், கற்றாழைகள்... இடைவெளிகளை இட்டு நிரப்பும் சுடுகாட்டு எருக்கஞ்செடிகள்...." நீண்ட வருணனையின் ஒரு பகுதி இது. பலவகை மரஞ்செடி கொடிகளை விளக்கும் இப்பகுதியில் இடம்பெறும் சொல்லாட்சிகள் கதையின் பிற்பகுதியில் நிகழவரும் கொலைவெறித் தாக்குதலைக் குறிப்பாகக் காட்டுகின்றன. இங்கே மொழியைச் சிறந்த கலைநுட்பத்துடன் கையாளும் தேர்ந்த கலைஞராகச் சமுத்திரம் தென்படுகிறார். (உயிர் ஊஞ்சல்).

ஒருவன், இன்னொருவன் மனைவியைப் புகழ்கிறான். "மேடம்... ஃபாரஸ்ட் பகுதிக்குப் போயிருக்கீங்களா... கோணலான தென்னை மரங்கள் பக்கத்துல, முள்ளம்பன்றி மாதிரியான ஈச்சமரங்களின் அருகில், கன்னங்கரேலென்று இருக்கிற பனைமரங்களுக்குச் சமீபத்துல ஒரு மரவகை மட்டும் பளபளப்பாய், ஆகாயத்துக்கும், பூமிக்கும் இடையே நேர்கோடு போட்டதுமாதிரி நளினமாய், ஒயிலாய் நிற்கும். அதுதான் பாக்குமரம். இந்தக் குடியிருப்புக் காட்ல வெவ்வேறு பெண் மரங்கள்ல நீங்க ஒரு பாக்குமரம். எஸ் மேடம் யூ ஆர் எ அரக்னட் ட்ரீ" கேட்பவள் மனத்தில் சலனத்தை ஏற்படுத்திய திட்டமிட்ட வருணனை இது. அந்தச் சலனமே, அவள் கணவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/12&oldid=1495095" இலிருந்து மீள்விக்கப்பட்டது