பக்கம்:ஈச்சம்பாய்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

ஈச்சம்பாய்



மேற்கொண்டு பேசாமல் சீனிவாசன், வெறுப்போடு வெளியே வந்து முனங்கினார். கல்லைப் பொறுக்குகிற அளவுக்கு இதுங்களுக்குப் பார்வை கொடுத்தது எவ்வளவு பெரிய தப்பு! அட கடவுளே...

யாரோ தன் கையைப் பிடிப்பதைப் பார்த்து, அவர் திடுக்கிட்டார். பொன்னம்மா பாட்டி வெற்றிலை வாயுடன் அங்கே வந்தாள்.

"ஏண்டாப்பா, அந்தக் கிழடுங்கள விடு. ஒன்னப்பத்தி நான் கலெக்டர் கிட்ட நல்லா சொல்றேன்... கவலப்படாத ராசா-"

"ரொம்ப ரொம்ப நன்றி பாட்டி, ஒனக்காவது நன்றி இருக்கே ."

"ஆனால் ஒண்ணு, நான் அப்படிச் சொல்லணுமுன்னா நீ எனக்கு மூணு ஆப்பிள் தரணும். எட்டணா கையில் கொடுக்கணும்."

"லஞ்சமா?"

“அப்படித்தான் வச்சிக்கயேன்."

"பாட்டி, இது அநியாயம்..."

"எதுடாப்பா அநியாயம்? நீ எத்தன பேருகிட்ட எவ்வளவு லஞ்சம் வாங்கியிருப்பே? அதுலதான் கேக்கேன். இப்பவே கொடுக்கணும். அப்பதான் நல்லபடியாச் சொல்லுவேன். இல்ல."

சீனிவாசன் மார்பில் அடித்துக்கொண்டே, அதே மார்புப் பையிலிருந்த எட்டணாவை எடுத்துக் கொடுத்தார். கோட்ட வளர்ச்சி அதிகாரிக்கு வைத்திருந்த அத்தனை ஆப்பிள் பழங்களையும் பாட்டியிடம் கொடுத்துவிட்டார். பாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/134&oldid=1371816" இலிருந்து மீள்விக்கப்பட்டது