பக்கம்:ஈச்சம்பாய்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஈச்சம்பாய்



"இல்ல. திமிறினான். அம்மா வாயில குத்தினான், வயித்துல உதச்சான். அப்பா அப்பான்னு அயுதான்."

கன்னய்யா குடிசைக்குள் ஓடினான். பரணில் சொருகி வைத்த பிச்சுவாக் கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டான். ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு சேரிப் பகுதியை நோக்கி ஓடினான்.

பத்து வருடங்களுக்கு முன்பு, பூவம்மாவைப் பிடித்த கையை இப்போது நெறித்துக் கொண்டான்.

டெய்லர் சுந்தரத்தை நினைக்க நினைக்கப் பற்கள் தானாகக் கடித்துக் கொண்டன.

அவனோடு ஓடிப்போன நாய் இப்போது ஏன் வந்தாள்? என்ன தைரியத்தில் பையனைத் தூக்கிப் போனாள்?

அய்ந்து வருடத்திற்கு முன்பு, டெய்லர் சுந்தரத்திற்குப் பெண் பார்த்ததே இவன் தான். அவசரக் கைமாற்று நூறு ரூபாய் கொடுத்ததும் இவன் தான். அவன் மனைவி, தன்னை 'அண்ணாத்த... அண்ணாத்த... என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும்போது, சொந்த சகோதரன்போல அவளைப் பார்த்து, பாசத்தால் பாகானவனும் இவன்தான். இரண்டு வருடத்திற்கு முன்பு, டெய்லர் கந்தரம் ஊரில் வீடு கட்டியபோது, அந்த வீட்டிற்கு ஒரு குத்துவிளக்கை வாங்கி வைத்தவனும் இவன்தான்.

அந்த விளக்கையே அணைக்கிறவள் மாதிரி, பூவம்மா அந்த வீட்டுக்கு ஓடி விட்டாள். சுந்தரத்தின் மனைவிக்கும் துரோகம், இவனுக்கும் துரோகம்.

கன்னய்யா குரங்குக் குல்லாய் மாதிரி நுனி சிறுத்து அடி பெருத்த செங்கல் மகுடத்தைச் சூட்டிய அந்த வீட்டுக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/142&oldid=1371792" இலிருந்து மீள்விக்கப்பட்டது