பக்கம்:ஈச்சம்பாய்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

141



நுழைந்தான். நுழைந்ததும், தன்னையறியாமலே, வலது கால் தரையை மிதித்த வேகத்தில், பூமியே குலுங்குவது போல் இருந்தது. ஏதோ ஒரு ஆபாசமான மாத நாவலைப் படித்துக் கொண்டிருந்த பூவம்மா, அவனைப் பார்த்ததும், கண்கள் நிலை குத்த, வலது கையின் பெருவிரலும், சிறு விரலும் ஒன்றை ஒன்று அழுத்த, சிறிது நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள். பிறகு இடது கையை தரையில் ஊன்றிக் கொண்டுபோய் உடம்பை மேலே நிமிர்த்தவும் முடியாமல், கீழே வீழ்த்தவும் முடியாமல், கையை காலாக, ஒற்றைக்கால் மிருகம் போல் அவனைப் பார்த்தாள்.

டெய்லரின் ஒரிஜினல் மனைவி பாப்பம்மாள், குப்புறப் படுத்துக் கிடந்தாள்.

பூவம்மா, மீண்டும் எழுந்திரிக்கப் போவதைக் கண்டதும் கன்னய்யா அதட்டினான்.

"அப்படியே இருந்த இடத்துல இருடி... இல்ல... நான் ஜெயிலுக்குப் போவ வேண்டியிருக்கும்."

பூவம்மாளின் அருகே, நீர்த் திட்டங்கள் இரு கன்னக் கதுப்பிலும் கரையாய்ப் படிந்திருக்க, விழியோரத்தில் ஈரப் பசை, இமை இரண்டையும் ஒட்டும்படி பிடித்திருக்க, தொண்டையைச் சொறிந்து கொண்டே, சூன்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுவன் ராமன், அகர வேகத்தில் ஓடி வந்து கன்னையாவின் கால்களைக் கட்டிக் கொண்டான். மோவாய், தந்தையின் முட்டிக் கால்களில் தொட்டு நிற்க, முட்டிக் கால்களுக்கு மேலே நீட்டிய தலையை அங்குமிங்குமாக ஆட்டினான்.

டெய்லரின் மனைவி, கண்களைத் திறந்து கழுத்தை வளைத்துப் பார்த்தாள், பிறகு, திடீரென்று எழுந்து, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/143&oldid=1371896" இலிருந்து மீள்விக்கப்பட்டது