பக்கம்:ஈச்சம்பாய்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

145



இந்தா பாரு என் முதுகில..... அவன் சூடு வச்சிருக்கிறத... தோ பாரு கழுத்து பிஞ்சி இருக்கிறதை.. ஒனக்குப் புண்ணியம் உண்டு அண்ணாத்தே... இந்தத் துத்தேறி முண்டயைக் கண் காணாத இடத்துல விட்டுட்டுப் பூடு..."

கன்னய்யா பதிலேதும் சொல்லாமல் பையனோடு அந்தக் குடிசையிலிருந்து வெளியேறப் போனான், திடீரென்று, யாரோ மோதுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தான்.

டெய்லர் சுந்தரம், அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டே, வாசலின் ஒரு பக்கம் சாய்ந்துகொண்டு, வலது கையை நீட்டி, அவனை வழி மறித்தான். இதற்குள், பூவம்மா ஒடிவந்து கத்தினாள்.

"என் கொயந்த... என் கொயந்த... என் கொயந்தயத் தூக்கிக்கினு போறான்.... கொயந்தய வாங்குங்க.... கொயந்த இல்லாம என்னால இருக்க முடியாது. கொயந்த.. அய்யோ ... குயந்த "

டெய்லர் கந்தரம் நீட்டிய கையை மடக்காமலே, "கொயந்தய இங்கே விட்டுட்டுப் போ. இல்லே, நீ எங்கேயும் போக முடியாது" என்றான்.

கன்னய்யா பதில் பேசவில்லை. இடுப்பில் சொருகியிருந்த பிச்சுவாவை எடுத்து வலது கையில் பிடிப்பக்கத்தைப் பிடித்துக் கொண்டே, "கைய எடுக்கிறியா, இல்லே, இதால எடுக்கணுமா?" என்றான்.

இதை எதிர்பாராத கந்தரம், வெளியே ஓடினான். ஓடியவன், ஒரு பெரிய கல்லோடு திரும்பி வந்தான். கல்லாலும், கத்தியாலும் ஒருவரை ஒருவர் குறி பார்த்தபோது, டெய்லரின்

ஈ.10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/147&oldid=1371889" இலிருந்து மீள்விக்கப்பட்டது