பக்கம்:ஈச்சம்பாய்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

ஈச்சம்பாய்


அவளுக்கு, கோபமும் சிரிப்பும் ஒன்றாய் வந்தன. கூடவே எச்சரிக்கை உணர்வும் இயல்பாய் வந்தது. சீ... இப்படியா ஒருத்திகிட்டே பேசுறது..?

அவள் மனதுக்குள் கோபமாய்த்தான் “சீச்சீ” சொல்லப் போகிறாள். ஆனால் அந்த வார்த்தையோ செல்லத்தனமான சீயாகவே ஒலித்தது.

“அதோ மிஸ்டர் சுப்பு வராரே- அவர் கிட்டேயே கேட்கேன்.”

அவள் பதறிப்போனாள். ‘இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லக் கூடாதுங்க’ என்று அவனிடம் சொல்லப் போனாள். பிறகு இவனிடம் மட்டும் இதை எப்படிச் சொல்ல முடியும் என்று யோசித்தாள். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எதிர்த்திசையில் சுப்பு வந்து கொண்டிருந்தான். உடனே இவன், அவனைப் பிடித்துக் கொண்டான்.

“ஹலோ மிஸ்டர் சுப்பு... என்ன அதிசயம், ஈவினிங் ஏழு மணிக்கு வாரவங்க நாலு மணிக்கே வந்துட்டீங்க.”

சுப்பு, அவனைப் பார்த்து முக்கல் முனங்கலோடு பல்லைக் காட்டினான். அதையே பதில் கேள்வியாய் உருவகப்படுத்தி இவன் பதிலளித்தான்.

“நீங்க மட்டும் எப்படி என்கிறீங்களா? என் பிழைப்புத்தான் தெரியுமே... விக்கிரமாதித்தன் பிழைப்பு- ஆபீஸாறு மாதம்.. டூராறு மாதம். அதனால ஆபீஸ் ஒர்க் முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்க வந்துட்டேன். நாளைக்குக் குல்பர்க்கா போறேன். இருபது நாள் டூர். என்ன மிஸ்டர் கப்பு! ஒரு மாதிரி இருக்கிறாப்போல...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/182&oldid=1388162" இலிருந்து மீள்விக்கப்பட்டது