பக்கம்:ஈச்சம்பாய்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

191



இல்லன்னு நீ சொன்னதைச் சொல்லல. சொன்னால் குளிர் விட்டுடும்."

கப்பு, போய்விட்டான்.

சந்திரா, கைகளைப் பிசைந்தாள். வியர்த்துக் கொட்டிய முகத்தைத் துடைக்கும் சுரணை கூட இல்லாமல் வெளியே வந்தாள். அப்போது கதவை மூடிவிட்டு, வெளியே வந்தவள் அப்பாத்துரையைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் ஓடோடி வந்தாள். அவன் தனது வாசலைக் கடக்கும்போது கதவைப் படாரென்று ஒப்பாரி வைப்பதுபோல் சாத்தினாள். அவன் "இதுக்கு மேல யாரும் என்னை அவமானப்படுத்த வேண்டாம். குடித்தனத்துக்கு மட்டுமில்ல குடியிருப்பு பகுதியில் வாழக்கூட ராசியில்லாதவன் நான். வேற வீடு பார்க்கத்தான் புறப்படுறேன்" என்று நின்று நிதானித்துச் சொல்வது கேட்டது.

சந்திரா, கதவைத் திறக்கப் போனாள். 'ஒங்க முகத்தில் விழிக்க எனக்குத் தகுதியில்லன்னுதான் கதவை மூடினேன்' என்று தனக்குத் தானே அரற்றினாள். ஆனாலும் -

திருமதி சந்திரா சுப்பு, கதவைத் திறக்கவில்லை. வாயில் அரற்றியபடி வாசலுக்கு வந்து சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்?

அப்படிச் சொன்னால், குளிர்விட்டு விடாதா? - அதாவது அவளுக்கு....


- கல்கி, விடுமுறை மலர் . 1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/193&oldid=1371645" இலிருந்து மீள்விக்கப்பட்டது