பக்கம்:ஈச்சம்பாய்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஈச்சம்பாய்


எனக்கு... சொத்து... சொகம் எதுவும் வேண்டாம்... அம்மாவையும், சொத்தையும் நீயே வச்சி கட்டிக் காப்பாத்து, என்னை கால், கையோட விட்டாப் போதும்...’

‘அது எப்படிடா முடியும்... அம்மாகிட்ட பால் குடிச்ச கணக்கு இருக்குது... நான் உன்னை ரெயில் ஏத்தி படிக்க வச்ச கணக்கிருக்கு... ஒன் அக்காமாறுங்க ஒனக்கு துணி துவைச்ச கணக்கிருக்குது... இதெல்லாம் கணக்கு பாக்க முடியாத கணக்குடா... எந்திரிடா.’

என்னண்ணே நீ... என்னை அடிமைமாதிரி நினைச்சுப் பேசுறே... மாரிமுத்து, தம்பியை அதிசயத்துப் பார்த்தான்... தேருக்கு நேராய் பேசாதவன்..... சின்னத் தேவைகளை அம்மா மூலமும், பெரிய தேவைகளை அண்ணி மூலமும் தெரியப் படுத்தியவன்... டெல்லிக்கு வேலையில் சேர புறப்படும் போதுமட்டும் தன் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மியவன், டெல்லிக்குப் போனதும் பேசாக்குறையை பக்கம் பக்கமாய் கடிதமாய் எழுதியவன்... நீ அண்ணன் அல்ல... அப்பா ! என்றவன்... ‘ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்தான்... ஆனால் எனக்கு ரெண்டு தாய்கள்’ என்று எழுதியவன்... அப்பேர்ப்பட்ட தம்பி.... ரெண்டு வருஷத்துக்கு முன்னால டெல்லியில வேலையில சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே வீட்டிற்கு ஓடி வந்தவன்... தன்னோடு காடுகழனிக்கு வந்தவன்... இந்த அத்தக்காரி வயலும் பக்கத்துலதான்... அங்கதான் இந்த மூதேவியோட இஸ்க்கு தொஸ்கு ஏற்பட்டிருக்குமோ?...

மாரிமுத்து, சிறிது சிறுமைப்பட்டு நின்றான். கடைசியாக அவன் மனப்போக்கை தெரிந்து கொள்வதற்காக ஒரு அஸ்திரத்தை வீசிப் போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/50&oldid=1371951" இலிருந்து மீள்விக்கப்பட்டது