பக்கம்:ஈச்சம்பாய்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

87


‘என்ன பொன்னம்மா.. என்ன நடந்தது. ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறே’

“ஏன் பிள்ளாண்டான ராவோடு ராவா போலிக பிடிச்சுட்டு போயிடுச்சேயப்பா.. அதுவும் நீ சொல்லி பிடிச்சுட்டு போயிடுச்சேயப்பா...”

“இந்தா பாரு... தத்துப் பித்துனு உளறாதே... உன் மகன் எனக்கு கூடப்பிறக்காத பிறப்பு மாதிரி... அவன நான் எப்பவுமே வேலைக்காரனா நினைச்சதில்லே... அப்படி இருக்கையிலே அவன பிடிச்சுக் கொடுப்பேனா. என்ன நடந்தது... சட்டு புட்டுனு. சொல்லு”

பொன்னம்மா கிழவி சிறிது நிதானப்பட்டான். ஒண்டியாய்ப் பிறந்த மகன் பாக்கியமுத்து அப்போதே ஜாமினில் வந்துவிட்டது போல் நினைத்தாள். வருத்தக்குறைவே அவளுக்கு மகிழ்ச்சியாய் தோன்றியது. அய்யாவைப்பார்த்து கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டதுபோல் நாணினாள். ‘மன்னிச்கடுப்பா’ என்று சொன்னபடியே அவர் கையைப் பிடிக்கப் போனாள். ஆனாலும் கூச்சம். டாலடித்த கடிகாரக் கையை தன் அழுக்குக் கையால் தீண்ட அச்சம். அவள் கை மேலேயே ஒரு அருவருப்பு.

சுந்தரம் பரபரத்தார்.

‘விவரமா சொல்லு பொன்னம்மா... எதுக்கும் நான் இருக்கேன்.’

இதுவே போதும் ராசா... இதுவே போதும் முந்தாநாளு உன்ன ரயிலுல வழியனுப்பிட்டு நைட்ல வீட்டுக்கு வந்தான்.... வந்தானா... வந்ததும் வராததுமா என் மருமக அவனுக்கு தட்டுல சோறு போட்டாள். ஒரு கவளம் சாப்பிட்டுருக்க மாட்டாம்பா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/89&oldid=1371872" இலிருந்து மீள்விக்கப்பட்டது