பக்கம்:ஈச்சம்பாய்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஈச்சம்பாய்



கொண்டார். அந்த போலீஸ்காரரை புதிராகப் பார்த்தார். அவருக்கும் புதிதாக வந்திருக்கும் ஐநூறு ரூபாய் நோட்டை ஒத்தையாகவோ, இரட்டையாகவோ பார்க்க ஆசை. இயல்பாக பேசுவதுபோல், பேசினார்.

'ஏன் சார் அப்படிப் பார்க்கிறீங்க... உங்களால நம்ப முடியாதது தான்... இதுதான் புகார் கொடுக்கிற ஒரு அப்பாவிக்கும், புகாரை விசாரிக்கிற போலிசுக்கும் உள்ள வித்தியாசம்... எத்தன பொம்பளைங்க கள்ளக் காதலனோட சேர்ந்து கட்டுன புருஷனக் கொன்னுட்டு கண்ணகி வேஷம் போட்டத பார்த்திருப்போம்.... எத்தன புருஷனுங்க பொண்டாட்டிய கொளுத்திட்டு.... தீப்பிடிச்சப்போது அவனக் காப்பாத்தப் போனதா அழுகிறதையும்... அதுக்கு அடையாளமா கை, கால்களிலே சூடு போடுறதையும் பார்க்கிறோம்... ஆமாம் சார்... உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பாலு.... எங்களுக்கோ பாலுகூட விஷத்தைக்கூட மறைக்கிற வெளுப்பு... இந்த மாதிரி அனுகூலச் சத்ருவா இருக்கிற பசங்களை நம்பவே கூடாது... நாளைக்கி உங்க மனைவியோ, மகளோ நகை போட்டிருந்தால், அதைக் கைப்பற்றப் பார்க்கலாம்... பொதுவாய் இவங்க ஆள் வச்கத்தான் செய்வாங்க.... அடையாளம் தெரிஞ்சிட்டால், கொலை கூடச் செய்வாங்க... சொல்றதைச் சொல்லியாச்சு.... இன்னும் எப்.ஐ.ஆர் போடல... வேணுமின்னா , அவனை ஜாமீன்ல எடுத்துட்டுப் போங்க... கிரைம் நாவல்களெல்லாம் படியுங்க... நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிடலாம்.....

கந்தரம் அசைவற்றுக் கிடந்தார். அவரைக் கையைப் பிடித்து இழுத்து சுயத்திற்குக் கொண்டு வந்த போலீஸ்காரர் பவ்யமாகக் கேட்டார்....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/98&oldid=1371828" இலிருந்து மீள்விக்கப்பட்டது