பக்கம்:ஈச்சம்பாய்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

97



அடிச்ச அடில, பய எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான்... வேணுமின்னா அவனப் போய்ப் பார்த்து நாலு கேள்வி கேட்கறீங்களா... நீங்க டிசிக்கு வேண்டியவர் என்கிறதாலதான் இவ்வளவும் செய்திருக்கிறோம். இல்லன்னா இது பத்தோடு பதினொன்னாவது கேசு...

கந்தரம், யோசிக்கவில்லை. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற எண்ணமும் எந்த வேகத்தில் வந்ததோ, அந்த வேகத்திலேயே போய்விட்டது. தீர்மானமாகச் சொன்னார்.

'அந்தத் துரோகிப்பயல பார்த்தாலே பாவம் சார்.. அடிபட்ட பாம்பு. அவன என் வம்புக்கு வராம பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. இதுக்கு எவ்வளவு செலவானாலும் சரி.'

சுந்தரம், எழுந்தார். புறப்படுவதற்காக வாசலைப் பார்த்தார், அந்தச் சமயம் பார்த்து வாசலுக்குள் நுழையப்போன ஒரு பச்சைகுத்தி கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டே, ஒதுங்கிக் கொண்டான்.



- தினமலர் தீபாவளி மலர் - 1994

ஈ. 7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/99&oldid=1371829" இலிருந்து மீள்விக்கப்பட்டது