பக்கம்:ஈட்டி முனை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

யும் கைலயங்கிரிச் சிவன் சிருஷ்டித்ததாகவும், ஆரிய அகத்தியன் பண்போடு வகுத்ததாகவும் 'கண்கட்டி வித்தை' காட்டிப் பதுக்கியிருக்க வேண்டும்.

தமிழைப் பயில்பவர்கள். காவியமும் இலக்கியமும் எழுதுகிறவர்கள் கடவுளின், காளி. முதலாம் சில்லறைத் கேவுகளின் கருணை கடாட்சமோ, எச்சில் தாம்பூலமோ, நாக்கிலே சக்கரமோ பெற்றிருக்க வேண்டும் என்று புழுகி மக்களை மயக்கினார்கள். அறிவுக்கு இருட்டடிப்பு போட்டார்கள்.

காவியங்களை எழுத தொந்திக் கணபதி தந்தம் முறித்துக்கொண்டு வந்ததாகவும், சரஸ்வதி அம்மை இடைச்சி போல் வேடமிட்டு வந்ததாகவும் கல்சிலைகள் வாய்திறந்து முதலடி எடுத்துக் கொடுத்தாகவும் அபாண்டப் புழுகுகளை வளர்த்து சாதாரண மக்களை தங்கள் சொல் வன்மையில் அடக்கி வந்திருக்கிறார்கள்.

அவர்கள் மதத்தையும், கடவுளர்களின் லீலைகளையும், பிற மதங்களை எதிர்க்கவும், தங்கள் சாமி பெரிய சாமி என நிரூபிக்கவும் ஆயிரமாயிரம், அற்புதச் சித்துவிளையாடல்களை கற்பித்து வரைந்து தள்ளினார்கள். பாமர மக்களை பிரமிக்கவைத்து, ஏமாறச் செய்து, தாங்கள் ஏற்றம் கொண்டார்கள்.

மதத்தையும் கடவுளையும் கருதாத பெருநிலக் கிழவர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், முட்டாள் தனமாக முல்லைக்குப் பொன்தேரும் மயில்களுக்குப் போர்வையும் அள்ளி விசிறும்படி ஊதாரித்தனம் பெற்றிருந்த சீமான்கள் முதலியோரை தம்வசம் இழுக்க, நீராமின்னாள்களையும்,நிசநாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/12&oldid=1368008" இருந்து மீள்விக்கப்பட்டது