பக்கம்:ஈட்டி முனை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

யும் - மதுவும் - சுவைத்து மங்கையர் பற்றி எண்ணியும் பேசியும், பிறர் வம்பு பேசியும், அவை பற்றி ஏட்டிலே தீட்டியும், கதைகள் எழுதி இலக்கியம் சமைத்தோம் என்று அகந்தை கொண்டு வாழ்கிறார்கள் இன்றைய எழுத்தாளர்களில் பெரும்பாலோர்.

உலகம் தங்களைச் சுற்றி அடங்கிவிட்டது என்று கருதும் 'இலக்கிய சாம்ராட்டுகள்' தாமே உலகம் என்று தறுதலைத்தனம் பெற்று, பிறரைத் துச்சமாய் மதிப்பதும், தம்மைத் தவிர வேறுயாரால் இலக்கியம் சிருஷ்டிக்க இயலும் என்றும் கொக்கரிக்கின்றார்கள்.

சிந்தனை என்றும், அறிவு வளர்ச்சி என்றும், மனிதரின் உரிமை என்றும் லட்சியம் எனவும் பேசியும் எழுதியும் அவற்றுக்காகவே வாழ்ந்தும் வருகிற ஒரு சிலரை, இந்த வீணர்கள் கையாண்டி செய்கிறார்கள். 'லட்சியப் பாதையாவது, ஒற்றையடி நெரிஞ்சிமுள் பாதையாவது! சிந்தனையாவது, சீனியாவரைக் காயாவது! அறிவாவது! மண்ணாவது! பேத்தல். சமூகத்து உரிமையாம்! சாட்டையாம்! சமூகத்துக்குச் செருப்படி கொடுப்போம்' என்று காலித்தனமாக, மடத்தனமாக உளறிக் கொட்டி, பேத்தி யும் புலம்பீயும் ஆத்மதிருப்தி கொள்கிறார்கள்.

சம்பிரதாயப் பொந்துகளிலே பதுங்கிக் கிடந்து பழங் குப்பைகளிலே புரண்டு, அந்தகாரத்திலே கொக்கரிக்கும் இவ்வீணர்களுக்கு, வீணர்களின் விருதா இலக்கியங்களுக்கு சாவோலை எழுத வேண்டிய காலம் வந்துவிட்டது. அவர்கள் இலக்கியாசிரியர்கள் என்ற சொல்லுக்கே அருகதையற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/16&oldid=1368013" இலிருந்து மீள்விக்கப்பட்டது