பக்கம்:ஈட்டி முனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


சமுதாயத்திலே பெரும்பாலோர் அவதியுறுவதை யும் ஒருசிலர் உண்டு கொழுத்து மாடி வீட்டிலே சுகபோகபாக்கியங்களுடன் மெத்தையில் சோம்பேறி களாய் புரளுவதையும் நீ காண்கிறாய். முன்னவர் சோக வாழ்வைப் பற்றியும், பின்னவரின் டாம்பீ கத்தை, சுரண்டலைப் பற்றியும் எழுது. போலிக் கருத்து பொசுக்கும் சொல் அனல் எரியும் கருவியாக்கு உன் பேனாவை. சிரித்துச் சிரித்து சமுதாய ஊழல்களை, மனிதரின் சிறுமைகளைச் சுட்டெரிக்கவல்ல குத்துகிற கையாண்டிச் சொற்களைத் தொடுக்கும் பானமாக்கு உனது பேனாவை. உணர்ச்சி நிறைந்த, அழகுள்ள புதுமைக் கருத்துகள் மின்னுகிற கவிதைகள் எழுது. கவிஞ னின் எண்ணங்களை, உனது அனுபவங்களை, உன் இதயத் துடிப்புகளை எழுது, கதைகளும் நாடகங்களும் நாவல்களும் எழுது வது மட்டும் போதாது, உளப்பரிசோதனை நூல்கள் வேண்டும். உலக வளர்ச்சி சரிதை வேண்டும். சூன்யத்திலே அண் டங்கள் பிறந்த கதை, அக்கினிப் பிழம்பு கெட்டித்து உலகமான கதை, உயிர் பிறந்த கதை, சிருஷ்டி சக்தி ராக்ஷஸ உயிர்களில் ஆரம்பித்து உயிர்களை வைத் துப் பரிசோதனை செய்து பல இனங்களை வகுத்து மனிதரை உண்டாக்கிய கதை.எழுதப்பட வேண் டும். இவற்றால் அடிபட்டுப் போகும் கடவுள் தத்து வத்தால் வந்த வினை, மதங்களின் பெயரால் விளை யும் அநாகரீகச் செயல்கள், மதத்தின் பெயரால் மனிதரை மடையர்களாக்குவோரின் வண்டவாளங் கள் இவற்றைப் பற்றி எழுது ஏராளமாக எழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/38&oldid=1370339" இலிருந்து மீள்விக்கப்பட்டது