பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

87

தாலுக்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒருவர் (அமுல்தார்) இசுலாமியராகவும் மற்ற இருவர் பெரும்பாலும் பிராமனாராகவே இருந்தனர், பாலக்காடு, கோயமுத்தூர் கோட்டைகளின் தலைவர்களும் பிராமணர்களே. திப்புவின் தலைமை அமைச்சர் பூர்ணய்யா தாராபுரத்தைச் சேர்ந்த கன்னட பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. பிராமணர்கள் பலர் முக்கியப் பொறுப்பில் இருந்தனர்.

இடைவிடாத போர்களின் இடையிலும் அதிகாரிகளை ஊர்தோறும் பயணம் செய்து நீதி பரிபாலனம் செய்யுமாறு திப்பு உத்தரவிட்டிருந்தார். விசயமங்கலத்தில் ஏற்பட்ட வலங்கை இடங்கைத் தகராறை அந்தியூர்க் கச்சேரி திவான் கிரிமிரே சாயுபு 5.2.1794ஆம் நாள் தீர்த்து வைத்தார்,

பவானிவட்டம் காவேரிபுரம் அருகே சுயம்வரப்பள்ளம் என்ற பகுதியிலிருந்த "சுயம்வர ஏரி" 50 ஆண்டுகள் உடைந்து கிடந்தது. திப்பு சுல்தான் 16000 பகோடாக்கள் செலவில் திருத்தி 520 ஏக்கம் பாயுமாறு செய்தார். குன்னத்தூர் அருகில் உள்ள குறிச்சிக் கோயிலுக்குக் கொடை அளித்தார்.

ஐதர், திப்பு ஆட்சியில் வரி வசூலில் 10இல் ஒரு பங்கு வைத்துக் கொண்டு பாளையக்காரர்கள் 9 பங்கு அரசுக்குச் செலுத்தவேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

எமக்கலாபுரம் ஜமீன் 100 பணம் வரி (நிகுதி) கொடுத்து வந்ததை ஐதர் அலி அதிகாரி 130 பணம் என்றும் பின் 300 பணம் என்றும் மீறு சாயயு சையது சாயபு உயர்த்தினார்,

"காச்சல் உபத்திரவத்தினாலே சிறிது குடிகள் மரணமாய்ப்
போன படியினாலேயும் பத்து வருஷம் அதிக தீர்வை
குடுத்து குடிகள் கைமெலிந்து ஓடிப்போய்விட்டபடியி
னாலேயும்"

உரிய வரிப்பணம் செலுத்தாத பாளையக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.