பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 125 தாண்டிக் குதிக்கும் தரையானது, கடினமான கட்டாந்தரையாக இருக்கக் கூடாது. தாண்டிக் குதிக்கிறபோது, கால்களுக்கு வலி ஏற்பட்டு விடும் என்பதால், சாதாரண மண் தரையாக அல்லது பலகை பதித்த தரையாக இருப்பது நல்லது. கயிறு தாண்டிக் குதிக்கும் பயிற்சி செய்ய, ஏற்ற நேரம் எது என்றால், உங்களுக்கு வசதியான ஒரு நேரத்தைக் குறித்துக் கொண்டு, தினமும் அந்த நேரத்தில் பயிற்சியைத் தொடர்வது நல்லதாகும். குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது பயிற்சி செய்யவும். இந்தப் பயிற்சியின் போது, வயிறு காலியாக இருப்பது நல்லது. குறைந்தது 1 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக, சாப்பிடுவதை நிறுத்தி வைத்திருப்பது பயிற்சிக்கு உதவும். இனி பயிற்சியைத் தொடங்கலாம். (1.அ) பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பாக, இரு கால்களையும் சேர்த்து நிற்கவும். முன்பக்கம் குனியாமல், பின்பக்கம் சாயாமல், நேராக நிமிர்ந்து நிற்கவும். தலை நிமிர்ந்து, கைகள் பக்கவாட்டில் வைத்து, கயிற்றைப் பின்புறமாகக் கீழே கிடத்தி வைத்திருப்பது தான் பயிற்சியின் ஆரம்பமாகும். (1.ஆ) கயிற்றைத் தலைக்குப் பின் புறமாக வீசி, தலைக்கு மேற்புறமாகக் கொண்டு வந்து, கால்களுக்குக் கீழாக வரும்போது, வலது காலைத் தூக்கிப் பின்புறமாகக் கொண்டு வந்து, இடது காலால் குதித்து நிற்கவும். (படம்