பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆண்கள் என்றால் அதிக வலிமை, வேகமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போய்விடுகின்றனர். ஆகவே, ஒழுங்காக, திட்டமிட்டபடி, தினசரி, கொஞ்சங் கொஞ்சமாகப் பயிற்சிகள் செய்கிறபோது வலிமை குறைவதில்லை, உருவமும் பாதிக்கப் படுவதில்லை. உடற்பயிற்சியா? உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி செய்தாக வேண்டும் என்றால், ஐயையோ என்று ஆறடிப்பாய்ந்து ஒடுபவர்கள் எண்ணிக்கையில் அதிகம். நாம் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால் போதும் என்றோம். உடற்பயிற்சிக்கு முன், சில ஒழுங்கான பழக்க வழக்கங்களை செய்து வந்தாலும், சற்று சிரமம்படுவதைத் தவிர்த்து வாழலாம். - ஒழுங்கான பழக்கங்கள்! தினம் தினம் நாம் செய்கிற கடமைகளிலும், காரியங்களிலும், உடல் தோரணையில் வளைவும், குணிவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதைத்தான் நல்ல பழக்கங்கள் என்கிறோம். 1. உட்காரும்போது நிமிர்ந்து உட்காரும் பழக்கம் பலருக்குக்கிடையாது. நாற்காலியில் உட்காரும்போது நுனியில் வந்து உட்கார்ந்து, முதுகை வளைத்துக் கொண்டு, வைத்திருப்பது தவறான பழக்கம்.