பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பீப்பாய் போன்ற அமைப்பு. அதில் உடல் தாங்குகிற அள்வுக்கு வெப்பம் பரவுமாறு அமைப்பு உண்டு. அதில் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு, கழுத்துப் பகுதிக்கு மேல் வெளியே இருப்பது போல், பயிற்சி முறையைத் தொடங்குவார்கள். உள்ளே இருக்கின்ற உஷணத்தின் காரணமாக, உடலில் வியர்வைக் கொப்பளிக்கும். நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்தது போல, தேகமும் நீரில் ததும்பி நிற்கும். இப்படித் தண்ணிர் இழப்பின் காரணமாக, தேகத்தின் எடை குறைந்து விடும். இந்த இழப்பு தற்காலிகமானது தான். இதுவே பரிபூரணமாய் நிலைத்து விடுவதல்ல. இப்படியாக, பயிற்சிக்கு வருகிற மக்களை, பளபளப்புக் கவர்ச்சியைக் காட்டி, இழுத்துப் போய் எந்திரங்களிடம் விட்டு விட்டுத் தந்திரமாகப் பிழைத்துக் கொள்கின்றவர்கள் எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் இருக்கத்தான் இருக்கின்றனர். பணச் செலவு அதிகம். ஆனால் எதிர் பார்க்கின்ற பயனோ குறைவுதான். மருந்தும் மாத்திரையும், உடல் எடையைக் குறைக்க உதவாது. ஆனால், உழைப்பிலே உடலை ஈடுபடுத்துகிற போதுதான், அதிலே உண்மையான பயன்கள் ஏற்படும். இதற்காக, வீட்டிலே, இருக்கிற இடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சில எளிய பயிற்சிகளைச் செய்கிறபோது, சிரமமில்லாது, தேகத்தின் எடையைக் கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயத்தில் உறுதியாகக் குறைத்து விடலாம். -