பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா உடல் அமைப்பு: ஒருவருக்கு உடல் அமைப்பு எப்படி இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்? அந்த அளவுதான், அழகு தரும் அமைப்பாகும். மனித உடலை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். சிறிய அளவு (Small), நடுத்தர அளவு(Medium) பெரிய அளவு (Large) எந்தப் பிரிவில் இருந்தாலும், மார்புக்கும் அடிவயிறு அல்லது இடுப்புக்கும் உள்ள அளவு, ஆணாக இருந்தால் 6 அங்குலமும், பெண்ணாக இருந்தால் 10 அங்குலமும், வித்தியாசம் இருக்கவேண்டும். ஒரு ஆணின் மார்பளவு-இடுப்பளவு 36-30 ஒரு பெண்ணின் மார்பளவு-இடுப்பளவு 36-26' இப்படி இருந்தால், அதாவது இது குறைந்த அளவு. இன்னும் அதிக அளவு இடைவெளி பெருகப் பெருகப் பார்ப்பதற்கு அழகும் கவர்ச்சியும் மேன்மை பெறும். இனி எடைப்பயிற்சிகளாக உதவும் உடலழகுப் பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்வோம். 6T60LüLiuolijälässt: (Weight training) உடலழகுப் பயிற்சிகள் அல்லது எடைப் பயிற்சிகள் செய்வதற்கு முன்னர், முன்னேற்பாடாக, செய்யும் இடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் பற்றி, முதலில் தெரிந்து கொள்வோம்.