பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

m -

எங்கும் இருக்கிற காற்று, எப்பொழுதும் திரிகிற காற்று, கண்ணுக்குத் தெரியாத காற்று, உலகில் வாழ உயிர்

தருகிற காற்று, அதனால்தான் காற்றை கடவுள் என்றே கூறுகின்றார்கள்.

வாயு பகவான் என்று வர்ணிக்கப்பட்டாலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு வலிமை உள்ள பூதம்தான் காற்றாகும். இந்தக் காற்றுப் பகுதியானது, நெஞ்சுக்கு மேலே கண்களுக்குக் கீழே உள்ள இடைப்பட்ட பகுதியாகும். வாயும், மூக்கும், தொண்டையும், காற்றை வாங்குகிற வாயில்களாகவே விளங்குகின்றன.

5. காற்றுப் பகுதிக்கு மேலே இருக்கின்ற அகன்ற பிரதேசம்தான் வானம். இந்த வானத்திலே எப்பொழுதும் ஒசைகள் ஓங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் என்பார்கள். அங்கே வழி - காற்றுமண்டலத்தின் குமுறல்கள். அங்கே உலவுகிற மேகக் கூட்டங்களின் உரசல்கள். அதிலே உண்டாகின்ற மின்னல் பூச்சுகள்.

அங்கே வளைந்து வண்ணங்களைக் காட்டுகின்ற வில் போன்ற அமைப்புள்ள வானவில். அதற்கும் மேலே இடி முழக்கம். நட்சத்திர உரசல்கள் போன்ற ஒசைகள் இப்படித் தான் வானம் இருக்கிறதென்றால், நம் கழுத்துக்கு மேலே உள்ள தலைப்பகுதியும் மேலே சொன்ன வானப் பகுதியைப் போல்தான் அமைந்திருக்கிறது.

வானத்திலே ஏற்படுகின்ற இடி முழக்கம். மின்னல் கீற்று போலே மனிதத் தலைக்குள்ளே எத்தனை மரண ஒலங்கள். தயக்கங்கள், கூக்குரல்கள். பேய்